கண்காணிப்பு எம்.பி.க்களுக்கு மேலதிக கொடுப்பனவு வழங்கப்படாது – அகிலவிராஜ்

கண்காணிப்பு எம்.பி.க்களுக்கு மேலதிக கொடுப்பனவுகள் வழங்கப்படமாட்டாது. பாராளுமன்றத்தில் இடம்பெறும் வாதப் பிரதிவாதங்களை திரிபுபடுத்தி மக்கள் மத்தியில் அரசியல் பிரச்சாரம் செய்வதே கூட்டு எதிரணியின் அரசியல் வாகிபாகமாக காணப்படுகிறது என அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.

கண்காணிப்பு எம்.பி.க்களின் கொடுப்பனவுகள் அதிகரிக்கப்படுமாயின் மக்களை வீதிக்கிறக்கி போராடுவதாக கூட்டு எதிரணியினர் குறிப்பட்டுள்ளமை தொடர்பில் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அரச ஊழியர்கள் அனைவரும் திருப்திபடும் வகையில் சம்பள அதிகரிப்பினை வழங்குவதற்கு தற்போது அரசாங்கம் முறையான வேலைதிட்டத்தினை முன்னெடுத்து வருகின்றது. நீதிபதிகளின் வேதன அதிகரிப்பு தொடரபில் கடந்த அமைச்சரவை கூட்டத்தில் இடம் பெற்ற ஒரு கருத்துடன் பாராளுமன்ற உறுப்பினர்களின் கொடுப்பனவகளும் அதிகரிக்கப்பட வேண்டும் என்ற விடயம் 2006 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட வேதன உயர்வு சட்டத்தின் பிரகாரம் முன்வைப்பட்டது.

பாராளுமன்றத்தில் அரசாங்கம் புதிய திட்டங்கள் முன்வைக்கும் போது பொது எதிரணியினர் அங்கு ஏதும் பேசாமல் வெளியில் வந்து ஒரு விடயத்தினை திரிபுப்படுத்தி மக்களை அரசியல் ரீதியில் திசைத்திருப்பி விடுகின்றனர்.

கண்காணிப்பு அமைச்சர்களுக்கு மேலதிகமாக எவ்வித கொடுப்பனவுகளும் வழங்கப்படமாட்டாது. இவ்விடயம் தொடர்பில் அரசாங்கம் எவ்விதமான கலந்துரையாடல்களையும் மேற்கொள்ளவில்லை என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!