கடவுளுக்கும் காது கூர்மை!!

யாழ்ப்­பா­ணத்­தைப் பிறப்­பி­ட­மா­கக் கொண்ட ஓர் அம்­மை­யார் தனது பிள்­ளை­க­ளு­டன் ஆஸ்­தி­ரே­லிய நாட்­டில் வாழ்ந்து வரு­கி­றார். அவர் தனது வரு­மா­னத்­துக்­கா­க­வும் ஆரோக்­கி­ய­மான உண­வுக்­கா­க­வும், பொழு­து­போக்­கா­க­வும் அங்கு கொல்­லைப்­பு­றத்­தில் கோழி வளர்க்­கி­றார். அவர் அண்­மை­யில் யாழ்ப்­பா­ணம் வந்­தி­ருந்தபோது தனது கோழி வளர்ப்­புப் பற்­றித் தனது ஊர்ப் பெண்களுக்­குக் கூறி­யி­ருக்­கி­றார்.

‘‘அங்கு கோழி வளர்ப்­பது மிக­வும் சிர­மம். சட்ட இறுக்­கம் அதி­கம். அதி­கா­லை­யில் சேவல், கோழி கூவும் சத்­தம் கேட்­டால் அதற்கு தண்­டப்­ப­ணம் செலுத்­த­வேண்­டும். அதற்­கா­கச் சேவல், கோழி­கள் கூவ ஆரம்­பிக்­கும் காலத்­தில் அதற்கு ஓர் ஊசி ஏற்றி, சேவலை நிரந்­த­ர­மா­கக் கூவாது தடுக்­கின்­ற­னர்’’. சத்­தத்­தால் ஏற்­ப­டு­கின்ற சூழல் பாதிப்­புக்­கா­கவே இந்­தக் கடப்­பாடு அங்கு நில­வு­கி­றது.

ஆனால் இங்கு…?
2.4.2018 அன்று நாயன்­மார்­கட்­டுக் கோவி­லொன்­றில் அதிக சத்­த­மாக ஒலி­பெ­ருக்­கி­கள் பாவிக்­கப்­ப­டு­கின்­றன என யாழ். மேல் நீதி­மன்­றில் தொட­ரப்­பட்ட வழக்கை விசா­ரித்த நீதி­பதி மா.இளஞ்­செ­ழி­யன் ‘‘கட­வு­ளுக்கு காது நல்ல கூர்மை. அத­னால் சத்­த­மாக வழி­பாடு செய்­ய­வேண்­டிய அவ­சிய மில்லை’’ என்று குறிப்­பிட்டு அந்த ஒலி­பெ­ருக்­கிப் பாவனை களைக் கட்­டுப்­ப­டுத்­தப்­ப­டுத்­து­மாறு குறிப்­பிட்­டார்.

இந்­தத் தீர்ப்பு எல்­லாக் கோயில்­க­ளுக்­கும் பொது­வா­னது என்று கொள்­வோ­மாக. ஆஸ்திரேலியாவில் ஒலிக்கும் கட்டுப்பாடு இருக்கிறது. ஆனால், இங்கு நாம் (இந்­துக்­கள், கிறிஸ்­த­வர்­கள், முஸ்­லிம்­கள், பௌத்­தர்­கள்) கோயில்­க­ளின் எல்லை தாண்டி அள­வுக்கு மிஞ்­சிய சத்­தத்தை ஏற்­ப­டுத்தி விடு­கி­றோம். அதிலும் நாலா­ பு­ற­மும் ஒலி­பெ­ருக்­கி­க­ளைக் கட்டி நாதஸ்­வ­ரம் பக்­திப் பாடல், பிரா­ம­ணர்­க­ளின் மந்­தி­ரம் என உச்­ச­மான சத்­தத்தை எழுப்பி மகி­ழும் பழக்­கம் எமக்கு மாத்­தி­ரமே இருக்­கி­றது.

365 நாள்­க­ளில் 10 – 20 நாள்­கள் வரை­யில் திரு­வி­ழா­வுக்­கா­கக் கோயி­லைப் பயன்­ப­டுத்­து­கின்­ற­னர். அதை­விட சூழலை ரண­க­ள­மாக்கி வரு­கின்­ற­னர். கோயில் எல்­லையை விட்டு வெளி­யில் ஒலி­ பெருக்­கி­யைக் கட்­டு­வது, சட்­டத்­துக்­குப் புறம்­பான வகை­யில் அதிக டெசி­பல் உள்ள ஒலி­பெ­ருக்­கி­க­ளைக் கட்டி ஒலிக்­க­வி­டு­கி­றார்­கள். ஒரு வகை­யில் சமூக விரோத செயற்­பாடு. ஓர் எல்­லை­தாண்­டிய பயங்­க­ர­வா­த­மும் ஆகும் .

பலர் சூழ்ந்து வாழும் சூழல்

ஒரு மதத்­த­வ­ரின் ஆல­யத்­தைச் சுற்றி வாழ்­ப­வர்­கள் அந்த மதத்­த­வர்­க­ளாக மாத்­தி­ரம் இருப்­ப­தில்லை. இந்தக் கோயில் திரு­வி­ழாக்­க­ளின் சத்­தத்­தால் பாதிக்­கப்­ப­டு­வது அனை­வ­ரும் தான். ஓர் இனம் தன்­னைத்­தானே அழித்­துக்­கொள்­ளும் முயற்­சி­யில் இறங்­கி­யி­ருக்­கும்­போது எதி­ரி­க­ளுக்கு அது மிக­வும் மகிழ்­வைக் கொடுக்­கும்.

தமி­ழர் இனப்­பெ­ருக்­கம் குறைந்த ஓர் இன­மாக இருப்­ப­தால், இருக்­கின்ற இளை­ஞர்­க­ளை­யும் பிள்­ளை­க­ளை­யும் நல்­ல­வர்­க­ளாக உரு­வாக்கி­ விடு­வது அனை­வ­ரது கடப்­பா­டா­கும். பௌத்­தம், இஸ்­லாம், கிறிஸ்­த­வம் ஆகிய மதங்­க­ளில் இருக்­கும் மதத் துற­வி­கள் மக்­க­ளுக்­குப் போத­னை­களை நடத்­து­கின்­ற­னர்.

அவர்­க­ளின் சமூக விட­யங்­கள், பொரு­ளா­தா­ரம், கல்வி, பண்­பா­டாக வாழ்­வது தொடர்­பில் போத­னை­கள் மூலம் வழிப்­ப­டுத்­து­கின்­ற­னர். மக்­க­ளும் அவற்­றைப் பின்­பற்­று­கின்­ற­னர். மற்றைய சமயத்தவருடன் ஒப்பிடுகையில் இந்து இளம் சந்ததி ஆலயத்தை நாடுவது குறைவு.

இந்­துக்­க­ளி­ட­மும், சைவர்­க­ளி­ட­மும் துற­வி­கள் இல்லை. துற­வி­களை உரு­வாக்க எந்த ஏற்­பா­டும் இல்லை. ஏனைய மதங்­க­ளில் தமது குடும்­பங்க ­ளிலி­ருந்து துற­வி­க­ளைத் தத்­த­மது மதங்­க­ளுக்­குச் சேவை­யாற்ற அனுப்பி வைக்­கின்­ற­னர். ஒரு கிறிஸ்­தவ துறவி குரு­ம­டத்­தில் பல வரு­டங்­கள் படித்­துப் பட்­டம் பெற­வேண்­டும்.

மௌல­விகள் மத­ர­சாக்­க­ளில் கற்­றுத் தேறு­கின்­ற­னர். பௌத்த துற­வி­கள் பிரி­வே­னாக்­க­ ளில் கற்­கின்­ற­னர். இந்­தப்­ப­டிப்­புப் பின்­ன­ணி­யி­லேயே அவர்­க­ளின் போத­னை­கள் நடை­பெ­று­கின்­றன. இவ்­வா­றா­ன­தொரு சூழல் இந்­துக்­க­ளுக்­கும், சைவர்­க­ளுக்­கும் இருப்­ப­தில்லை.

திரு­வி­ழா­வின்­ போது நிகழ்த்­தப்­ப­டும் சொற்­பொ­ழி­வு­க­ளில் பேசு­கின்றவர்கள் சில சம­யங்­க­ளில் மாண­வர்­க­ளின் கல்வி வளர்ச்சி பற்­றி­யும் பேசு­கின்­ற­னர். அதை­யும் ஒலி­பெ­ருக்கி ஊடா­கவே பேசு­கின்­ற­னர். இவர்­கள் படிப்­பைப் பற்றி பேசு­வதை விடுத்து, ஒலி­பெ­ருக்­கி­களைக் கோவி­லுக்கு வெளி­யில் யாரும் பாவிக்­கக்­கூ­டாது என கோயில் நிர்­வா­கத்­துக்­கும் திரு­ விழாக்­கா­ரர்­க­ளுக்­கும் காதுக்­குள் சொன்­னால் அந்­தச் சூழ­லில் உள்ள மாண­வர்­கள் நன்­றா­கப் படிப்­பார்­கள். அவர்­க­ளின் படிப்­புக்­கும் கோயில்­கள் வேறு வகை­யில் உதவ முடி­யும்.

கட­வுள்­மீது பக்­தி­யுள்ள மக்­கள் 24 மணி­நே­ர­மும் கோயில்­க­ளில் தங்கி, இறை­பு­கழ் பாடி இன்­புற்­றி­ருப்­பது தவ­றல்ல. தாங்­கள் விழித்­தி­ருக்­கி­றோம் என்­ப­தற்­காக மற்­ற­வர்­க­ளும் துன்­பப்­ப­ட­வேண்­டும் என்று நினைப்­பது­ தான் கட­வு­ளின் பெய­ரால் செய்­யப்­ப­டு­கின்ற அத்­து­மீ­றல் ஆகும்.

ஒலி பரப்புவதில் பெருமை!
இந்­துக் கட­வு­ளர்­க­ளுக்­குக் காது செவி­டாக இருக்­க­வேண்­டும் அல்­லது இந்த ஒலி­பெ­ருக்கிச் சத்­தத்­துக்கு அவர்­கள் எங்கோ ஓடி­யி­ருக்­க­வேண்­டும். இந்து மதத்­து­டன் ஒலி­பெ­ருக்கி சேர்ந்து பிறந்த ஒன்­றல்ல. இந்­து­ம­தம் மிகப் பழை­யது என்று கூறு­வ­தன் அர்த்­தம் இந்த ஒலி­பெ­ருக்­கிச் சத்­தத்தை வைத்­துப் பார்க்­கும்­போது சரி­யென்றே ஏற்றுக்கொள்ள வேண்­டி­யுள்­ளது.

ஒரு வளர்ச்­சி­ய­டை­யாத இனத்­துக்­கு­ரிய தன்­மை ஆஸ்திரேலியாவில் இப்படியிருக்கிறது. வளர்ச்­சி­ய­டைந்த ஆஸ்­ரே­லிய சமூ­கம் சேவல் கூவு­வது மற்­ற­வர்­க­ளுக்கு இடை­யூறு விளை­விக்­கும் என அது கூவுவதைக் கட்டுப்படுத்திச் சட்­ட­மாக்­கி­யுள்­ள­னர். ஆனால், இங்குள்ள கோயில்­க­ளின் ஒலி­பெ­ருக்கி விட­யத்­தில் இன்­னொ­ரு­படி முன்­னேற்­றம் காணப்­ப­டு­கி­றது. கோயில் திரு­வி­ழாக்­க­ளின்­போது ஒவ்­வொரு திரு­வி­ழா­வுக்கும் ஒவ்­வொ­ரு­வர் பொறுப்­பாக இருப்­பார்.

அவரே தெப்பை அணிந்து பூசை­யைச் செய்­விப்­பார். இவ்­வா­றான திரு­வி­ழாக் காரர்­க­ளுக்­குத் தெரி­யா­மல் அல்­லது அவ­ருக்கு ஆத­ர­வாக வேறு சிலர் வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து பணம் அனுப்பி ஒலி­பெ­ருக்­கிக்­கா­ரர்­களை ஒலி­பெ­ருக்­கி­களை ஒலிக்­கச் செய்­கின்­ற­னர்.

இதன்­மூ­லம் ஒலி­பெ­ருக்கி வைத்­தி­ருப்­ப­வ­ருக்கு வரு­மா­ன­மும், வெளி­நாட்­டி­லி­ருந்து பணம் அனுப்­பு­ப­வ­ருக்கு பெரு­மை­யும் சேர்­கி­றது.
ஒரு திரு­விழா சங்­கை­யாக நடந்­தது என்­றால் ‘‘எத்­தனை கூட்­டம் மேளம் அடித்­தது? எத்­தனை ஒலி­பெ­ருக்­கி­கள் பாடின? எவ்­வ­ளவு தூரம் வர்ண பல்ப்­பு­கள் பூட்­டி­னார்­கள்? எவ்­வ­ளவு வான வெடி­கள் போட்­டார்­கள்?’’ என்றே கேட்­கின்­ற­னர். இதுவே தமி­ழ­ரின் பெரு­மை­யாக உள்­ளது.

ஒரே இடத்­தில் போட்­டிக்கு 2 அல்­லது 3 ஒலி­பெ­ருக்­கி­கள் கட்­டப்­ப­டு­வ­தால் அதிக சத்­த­மும் நாதஸ்­வ­ரம் போன்ற இனிய வாத்­திய இசை­கள் அல­றும் சத்­த­முமே கேட்­கின்­றன. இதை இனிமையான இசையாக எப்படி இரசிக்கமுடியும்? பரீட்­சைக்­குத் தயார்­ப­டுத்­து­கின்ற மாண­வர்­க­ளுக்கு இது மிக­வும் தொல்­லை­யாக இருக்­கும். இந்த விட­யத்­தில் யாரும் கவ­னிப்­ப­தாக இல்லை. ஒரு சில­ரின் பெரு­மைக்­காக ஏழைப்­பிள்­ளை­கள் அழிந்து போக­வேண்டி உள்­ளது.

‘‘10 நாளும் சகித்­துக்­கொள்­ளுங்கோ என்ன செய்­வது? லவுட்ஸ்­பீக்­கரை கழற்­றச் சொன்­னால் திரு­வி­ழாக்­கா­ரர் கோவிப்­பி­னம்’’ என்­கி­றார்­கள்.
இதை­விட ஒலி­பெ­ருக்­கி­யைக் கட்­டு­ப­வர்­கள் அல்­லது அதை ஒரு தொழி­லா­கச் செய்­ப­வர்­க­ளுக்கு ஒலி அலை­கள் எவ்­வாறு பய­ணிக்­கும் என்ற தொழில்­நுட்ப அறிவு இருப்­ப­தில்லை. இத­னால் சூழல் அதி­கம் மாச­டை­வ­து­டன், சந்­தி­க­ளில் ஒலி­பெ­ருக்­கி­க­ளைக் கட்­டு­வ­தால் விபத்­துக்­க­ளும் ஏற்­ப­டு­கின்­றன.

எல்லா இடங்­க­ளி­லும் ஒலி­ பெருக்கி கட்­டப்­பட்­ட­பின் அவை இயக்­கப்­ப­டும்­போது பேரி­ரைச்­சல் வெளி­வ­ரு­கி­றதே தவிர, இர­சிக்­கக்­கூ­டி­ய­தாக எது­வும் இருப்­ப­தில்லை. அவர்­க­ளைப் பொறுத்­த­வ­ரை­யில் வாங்­கிய காசுக்குக் கூவி­னால் போது­மென்ற நிலையே காணப்­ப­டு­கி­றது. இவ்­வா­றான ஒலி­பெ­ருக்­கி­க­ளுக்கு எதி­ராக யாரா­வது கதைத்­தால் அது தெய்வ குற்­ற­மா­கக் கொள்­ளப்­ப­டு­கி­றது.

ஒரு பொலிஸ் அதி­கா­ரி­யு­டன் இது விட­ய­மா­கப் பேசி­ய­போது ‘‘இந்த ஒலி­பெ­ருக்­கி­யால் எங்­க­ளுக்­கும் நிம்­ம­தி­யில்லை. என்ன செய்­வது என்று சகித்­துக்­கொண்­டி­ருக்­கி­றோம். நாங்­கள் போய் அகற்­றி­னால் அர­சி­யல்­வா­தி­க­ளும் மதம் சார்ந்­த­வர்­க­ளும் அதனை ஒரு மதத்­திற்கு எதி­ரான அல்­லது இனத்துக்கு எதி­ரான நட­வ­டிக்­கை­யாக எடுத்­து­வி­டு­வார்­கள். பொது­மக்­கள் அது­பற்­றிய முறைப்­பாடு ஒன்றைப் பதிவு செய்­தால் நாங்­கள் நிச்­ச­யம் அதற்கு நட­வ­டிக்கை எடுப்­போம்’’ என்­றார்.

முதலமைச்சரின் அணுகுமுறை!
அண்­மை­யில் முத­ல­மைச்­சர் சி.வி.கே.விக்­னேஸ்­வ­ரன் பொலிஸ் அதி­கா­ரி­களை யாழ்ப்­பா­ணத்­தில் சந்­தித்து ‘‘குற்­றச் செயல்­கள் குறைந்­துள்­ளன’’ என்று பொலி­ஸா­ரைப் பாராட்­டி­யி­ருந்­தார். ஒலி­பெ­ருக்கி விட­யத்­தில் மதில்­மேல் பூனை என்ற அணுகு­ முறை­யையே கடைப்­பி­டித்­தார்.

அதா­வது, கோயில் திரு­வி­ழாக்­கா­ர­ரை­யும் பகைத்­து­வி­டக்­கூ­டாது. அதே­வேளை, ஒலி­பெ­ருக்­கி­யால் அசௌ­க­ரி­யப்­ப­டு­ப­வர்­க­ளின் மனம் குளி­ரும் வகை­யி­லும் அறிக்கை விட்­டி­ருந்­தார். ஆனால் பொலிஸ் அதி­கா­ரி­க­ளி­டம் ‘ஒரு கோயி­லின் எல்லை என்­பதை வரை­ய­றுத்து அய­லி­லுள்ள மக்­க­ளுக்கு இடை­ யூறாக பொருத்­தப்­ப­டு­கின்ற அனைத்து ஒலி­பெ­ருக்­கி­க­ளை­யும் பறி­மு­தல் செய்­யுங்­கள்’ என்ற அறிக்கை விட்­டி­ருந்­தால் மறு­நாளே இந்த விட­யம் கட்­டுப்­பாட்­டுக்­குள் கொண்­டு­வ­ரப்­பட்­டி­ருக்­கும்.

வட­மா­காண சபை உறுப்­பி­னர்­க­ளால் கோயில்­க­ளுக்கு வழங்­கப்­பட்ட ஒலி­பெ­ருக்­கி­கள் ஒரு சமூ­க­வி­ரோதச் செயற்­பாட்டுக்குப் பயன்­ப­டு­கி­றது என்­பது பற்றி அவர் வாய் திறக்­க­வில்லை. 119 அமர்­வு­களை வட­மா­காண சபை கடந்துவிட்­டது. ஓர் அமர்வை வட­மா­காண சபை இந்த ஒலி­பெ­ருக்கி விட­யத்துக்காகக் கூட்­டி­னால் (வட­மா­காண சபைக்­குள் இருக்­கும் ஒலி­வாங்­கி­கள் பிடுங்­கப்­ப­டா­மல் பாது­காக்­கப்­ப­டல் வேண்­டும்) ஆக்­க­பூர்­வ­மான ஒரு விட­யத்­தை­யா­வது வட­மா­காண சபை செய்­த­தாக இருக்­கும்.

நல்­லூர்க் கோயில், நயி­னா­தீவு நாக­பூ­சணி அம்­மன் கோயில், மட்­டக்­க­ளப்பு மயி­லம்­பா­வெளி அம்­மன் கோயில் போன்ற கோயில்­க­ளில் மிகச் சிறிய சத்­தம் குறைந்த ஒலி­பெ­ருக்­கி­க­ளையே பாவிக்­கின்­ற­னர். இதைமீறும் கோயில் தலை­வர்­கள் மற்­றும் நிர்வாகத்தினர் ஆகி­யோ­ருக்கு நீதி­மன்­றம் தண்­டனை வழங்­கி­னால் மிக இல­கு­வாக இந்­தத் தொல்­லை­யி­லி­ருந்து இந்­துக்­க­ளும், சைவர்­க­ளும் விடு­பட முடி­யும்.

இது விட­யத்­தில் இந்து கலா­சார அமைச்சு, சுற்­றுச்­சூ­ழல் அமைச்சு, மாகாண சபை­கள், பிர­தேச செய­ல­கங்­கள், பிர­தேச அமைப்­புக்­கள், மனித உரி­மை­கள் அமைப்­பு­கள், பாட­சாலை அதி­கா­ரி­கள் சிவ­சேனா போன்ற சமய அமைப்­புக்­கள் இதில் தலை­யி­டு­வது அவ­சி­ய­மா­கும்.

ஒரு பண்­பா­ட­டைந்த சமூ­கம் தனது பேச்­சி­லும், மற்­ற­வர்­க­ளு­டன் பழகுவ­தி­லும், நடை, உடை பாவனை போன்­ற­வற்­றி­லும், மெல்­லிய சத்­தத்­து­ட­னான இசை மற்­றும் பாடல்­களை இர­சிப்­ப­தி­லும், வாசிப்­புப் போன்­ற­வற்­றால் மனதை ஒரு நிலை­யில் வைத்­தி­ருப்­பது என எல்லா விதத்­தி­லும் மேன்­மை­யா­ன­வர்­க­ளாக இருப்­பார்­கள். அவர்­கள் ஏனை­ய­வர்­க­ளின் நிம்­ம­திக்­குப் பாத­க­மாக எதை­யும் செய்­யப்­போ­வ­தில்லை.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!