போராட்­டத்­துக்கு முடி­வு­தான் என்ன? கேப்­பா­பி­லவு மக்­கள் மனு!!

வீதி­யோ­ரத்தை வீடாக்கி சொல்ல முடி­யாத துய­ரங்­க­ளு­டன் எமது பூர்­வீக வாழ்­வி­டங்ளை விடு­விக்­கக் கோரிய எமது நியா­யப் போராட்­டத்­துக்கு முடிவு என்ன? இவ்­வாறு கேள்வி எழுப்­பி­யுள்ள கேப்­பா­பி­லவு மக்­கள், நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள், வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளுக்குத் தங்­க­ளது கோரிக்­கை­கள் அடங்­கிய மனுவை நேற்­றுக் கைய­ளித்­த­னர்.

இரா­ணு­வம் சுவீ­க­ரித்­துள்ள காணி­களை விடு­விக்­கு­மாறு கோரி கடந்த ஆண்டு மார்ச் மாதம் முத­லாம் திகதி ஆரம்­பித்த நில­மீட்பு போராட்­டம் ஓராண்­டைத் தாண்­டிய நிலை­யில் 414 ஆவது நாளாக நேற்­றும் இரா­ணுவ முகா­முக்கு முன்­னால் தொடர்ந்­தது. 104 குடும்­பங்­க­ளுக்­குச் சொந்­த­மான 181 ஏக்­கர் காணி­களை விடு­விக்­கும் வரை தமது போராட்­டம் தொட­ரு­மென தெரி­வித்து கேப்­பா­பி­லவு மக்­கள் தொடர் போராட்­டத்தை முன்­னெ­டுத்து வரு­கின்­ற­னர்.

எதிர்­கட்­சித் தலை­வர் இரா.சம்­பந்­தன் மற்­றும் தமிழ் அர­சுக் கட்­சித் தலை­வ­ரும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மாவை சேனா­தி­ராசா, ஆகி­யோ­ருக்­கான மனுக்­களை நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் திரு­மதி சாந்தி சிறிஸ்­கந்­த­ரா­சா­வி­டம் கைய­ளித்­த­தோடு ஏனைய நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்­கான மனுக்­க­ளும் அனுப்பி வைக்­கப்­பட்­டது.

வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன், வடக்கு மாகாண அவைத்­த­லை­வர் சி.வி.கே.சிவ­ஞா­னம் ஆகி­யோ­ருக்­கான மனுக்­களை மாகாண சபை உறுப்­பி­னர் ஆ.புவ­னேஸ்­வ­ர­னி­டம் ஒப்­ப­டைத்­த­னர்.
மக்­கள் பிர­தி­நி­தி­க­ளி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்ட மனு­வில், கேப்­பா­பி­லவு பூர்­விக வாழ்­விட வழித்­தோன்­றல் மக்­க­ளா­கிய நாம் எமது வாழ்­வி­டம் கோரி நீதி நியா­ய­மான உரி­மை­யான கோரிக்­கை­களை முன்­வைத்து தொடர் கவ­ன­வீர்ப்­புப் போராட்­டத்­தில் கால்­ப­தித்த போது தாங்­க­ளும் இயன்­ற­ளவு முயற்­சி­கள் எடுத்து ஒரு தொகுதி வாழ்­வி­டம் கிடைக்­கப் பங்கு கொண்­ட­மைக்­காக நாம் நன்­றி­க­ளைத் தெரி­வித்­துக் கொள்­கி­றோம்.

எமது கோரிக்­கைக்கு அர­சி­னால் இது­வரை சாத­க­மான முடி­வு­கள் கிடைக்­கப்­பெ­ற­வில்லை வீதி­யோ­ரத்தை வீடாக்கி சொல்ல முடி­யாத துன்ப துய­ரங்­க­ளைச் சுமந்து எமது பூர்­விக வாழ்­வி­டம் எமக்கு வேண்­டும் என்ற தள­ராத மன உறு­தி­யு­டன் 414 நாள்­க­ளாக தொடர் கவ­ன­வீர்ப்­புப் போராட்­டத்­தில் கால் பதித்து நிற்­கும் எமக்கு முடிவு என்ன?. மக்­கள் பிர­தி­நி­தி­க­ளான நீங்­கள் என்ன முடிவு சொல்­கி­றீர்­கள் – என்­றுள்­ளது.

மனுக்­க­ளைப் பெற்­றுக் கொண்ட நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் திரு­மதி சாந்தி சிறிஸ்­கந்­த­ராசா கருத்­துத் தெரி­விக்­கும் போது, மக்­க­ளது கோரிக்கை நியா­ய­மா­னது. போர் முடி­வுக்கு வரும் வரை அவர்­கள் இந்­தக் காணி­க­ளில் பூர்­வீ­க­மாக வாழ்ந்­த­வர்­கள்.

அந்­தக் காணியை விடு­வித்து தங்­க­ளுக்கு ஒரு இயல்­பான வாழ்க்கை ஏற்­ப­டுத்­தித் தரு­மா­று­தான் அந்த மக்­கள் கோரு­கின்­ற­னர். இதற்­கா­கவே தெருவை வீடாக்கி வாழ்ந்து வரு­கி­றார்­கள். நிச்­ச­ய­மாக இந்த அரசு அவர்­க­ளு­டைய கோரிக்­கை­க­ளுக்­குச் செவி­சாய்க்க வேண்­டும். ஆக்­கி­ர­மிக்­கப்­பட்­டுள்ள எமது காணி­கள் விடு­விக்­கப்­ப­ட­வேண்­டும் – என்­றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!