பாரிய வெள்ள அனர்த்தத்திற்கு தமிழ்நாடே காரணம்- கேரளா பரபரப்பு குற்றச்சாட்டு

முல்லைப்பெரியாறு அணையிலிருந்து தமிழகம் தண்ணீர் திறந்துவிட்டதன் காரணமாகவே கேரளாவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது என கேரள மாநில அரசாங்கம் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கேரளஅரசாங்கம் இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது.

முல்லைபெரியாறு அணையிலிருந்து தமிழகம் தீடிர் என நீரை திறந்துவிட்டதே கேரளாவில் மிக மோசமான வெள்ளம் ஏற்படக்காரணம் என நீதிமன்றில் தாக்கல் செய்துள்ள மனுவில் கேரள அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அணையின் கீழ் பகுதியில் இருக்கும் மக்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கு தமிழக அதிகாரிகள் போதிய காலஅவகாசத்தை வழங்கவில்லை எனவும் கேரள அரசாங்கம் தெரிவித்துள்ளது.

எந்த முன்னறிவிப்பும் இன்றி தமிழக அரசு முல்லைபெரியாறு அணையிலிருந்து நீரை திறந்துவிட்டுள்ளது, என தெரிவித்துள்ள கேரள அரசு கொஞ்சம் கொஞ்சமாக நீரை திறக்கவேண்டும் என்ற எங்கள கோரிக்கையை தமிழக அரசு ஏற்கவில்லை என குற்றம்சாட்டியுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!