திமுகவில் இணைத்தால் ஸ்டாலினை தலைவராக ஏற்றுக்கொள்ள தயார் – மு.க.அழகிரி

திமுகவில் சேர்த்துக்கொண்டால் மு.க.ஸ்டாலினை தலைவராக ஏற்றுக்கொள்ள தயார் என்று முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரி கூறினார்.

முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரி வருகிற 5-ந்தேதி சென்னையில் உள்ள கருணாநிதி நினைவிடத்துக்கு அமைதி பேரணி நடத்த திட்டமிட்டுள்ளார். இதற்காக பல்வேறு மாவட்ட ஆதரவாளர்களுடன் அவர் தினந்தோறும் மதுரையில் உள்ள அவரது வீட்டில் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இன்று 7-வது நாளாக ஆலோசனைக்கூட்டம் நடந்தது. பின்னர் மு.க. அழகிரி, நிருபர்களிடம் கூறியதாவது:-

தி.மு.க.வில் எங்களை சேர்த்துக்கொண்டால் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளோம். தி.மு.க.வில் சேர்த்துக் கொண்டால் மு.க.ஸ்டாலினை தலைவராக ஏற்றுக்கொள்ளத்தானே வேண்டும்.

அவ்வாறு சேர்த்துக் கொள்ளாவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கையையொட்டி பிறகு முடிவு எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுவரை மு.க.அழகிரி தி.மு.க. தலைமைக்கு எதிராக கருத்துக்கள் கூறி வந்த நிலையில் இன்று மு.க.ஸ்டாலினுக்கு ஆதரவாக கூறி இருப்பது தொண்டர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!