சுரேஷ் இப்­போது என்ன கூறு­வார்?

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு யாழ்ப்­பா­ணத்­தில் ஈ.பி.டி.பியு­டன் இணைந்து ஆட்சி அமைத்­த­போது வெட்­கம் கெட்ட கூட்­ட­மைப்பு என்று விமர்­சித்த, சுரேஷ் பிரே­ம­ச்சந்­தி­ரன் தனது கட்­சி­யி­னர் ஈ.பி.டி.பியு­டன் இணைந்து வவு­னி­யா­வில் ஆட்சி அமைத்­துள்­ள­மைக்கு என்ன கூறப் போகின்­றார் என்று கேள்வி எழுப்­பி­யுள்­ள­னர் அர­சி­யல் அவ­தா­னி­கள்.

உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லில் தொங்கு நிலை ஏற்­பட்ட சபை­க­ளின் தவி­சா­ளர் தெரி­வு­கள் யாழ்ப்­பா­ணத்­தில் கடந்த மாத இறு­தி­யில் ஆரம்­ப­மா­கின. ஈ.பி.டி.பியின் ஆத­ர­வு­டன், கூட்­ட­மைப்பு பெரும்­பா­லான சபை­க­ளைக் கைப்­பற்­றி­யது.

அது தொடர்­பில் ஈ.பி.ஆர்.எல்.எவ். அமைப்­பின் தலை­வர் சுரேஷ் பிரே­ம­சந்­தி­ரன் கடு­மை­யான விமர்­ச­னங்­களை முன்­வைத்­தி­ருந்­தார்.
“தங்­களை முன்­னர் பெரிய கொள்­கைப் பிடிப்­பா­ளர்­க­ளா­கக் காட்­டிக் கொண்­ட­வர்­கள் – தங்­க­ளது கொள்­கைக்­கும் ஈ.பி.டி.பிக்­கும் ஒத்­து­வ­ராது என்று சொன்­ன­வர்­கள் – ஈ.பி.டி.பி. மீது கார­சா­ர­மான விமர்­ச­னங்­களை முன்­வைத்­த­வர்­கள் இன்று அரச தரப்­பு­டன் இணைந்­து­தான் சபை­களை தற்­போது உரு­வாக்­கின்­றார்­கள் என்­பது வெட்­கக் கேடான விட­யம்”-­என்று சுரேஷ் பிரே­ம­சந்­தி­ரன் குறிப்­பிட்­டி­ருந்­தார்.

இந்­தப் பின்­ன­ணி­யில் வவு­னியா நகர சபை­யின் தவி­சா­ளர் தெரிவு நேற்­றுக் காலை இடம்­பெற்­றது. தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பை எதிர்த்து தமி­ழர் விடு­த­லைக் கூட்­டணி போட்­டி­யிட்­டி­ருந்­தது. கூட்­ட­ணி­யின் சார்­பில் போட்­டி­யிட்ட ஈ.பி.ஆர்.எல்.எவ். உறுப்­பி­ன­ருக்கு, ஈ.பி.டி.பி., மகிந்­த­வின் சிறி­லங்கா பொது­மக்­கள் முன்­னணி, சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி, ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யில் அமைச்­சர் ரிசாட் பதி­யு­தீ­னின் அகில இலங்கை மக்­கள் காங்­கி­ர­ஸைச் சேர்ந்­த­வர்­கள் ஆத­ர­வாக வாக்­க­ளித்­தி­ருந்­த­னர்.

கூட்­ட­மைப்பை விமர்­சித்த சுரேஷ் பிரே­ம­சந்­தி­ரன் தனது கட்சி உறுப்­பி­னர்­கள் செய்­ததை என்­ன­வென்று சொல்­லப் போகின்­றார் என்று அர­சி­யல் அவ­தா­னி­கள் கேள்வி எழுப்­பி­யுள்­ள­னர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!