கொழும்பு பாதுகாப்பு கருத்தரங்கு நிறைவு – சமூக ஊடக அச்சுறுத்தல்களுக்கு முக்கியத்துவம்

சிறிலங்கா இராணுவத்தின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட 8 ஆவது கொழும்பு பாதுகாப்பு கருத்தரங்கு நேற்று மாலை நிறைவடைந்தது.

கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் நேற்று முன்தினம் 8 ஆவது கொழும்பு பாதுகாப்புக் கருத்தரங்கை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆரம்பித்து வைத்திருந்தார்.

நேற்று முன்தினமும் நேற்றும் நடந்த இந்தக் கருத்தரங்கில் பல்வேறு நாடுகளின் இராணுவ, பாதுகாப்பு நிபுணர்கள் கலந்து கொண்டு உரையாற்றினர்.

இந்தப் பாதுகாப்புக் கருத்தரங்கில், 115 வெளிநாட்டு பாதுகாப்பு நிபுணர்களும், சிறிலங்கா படைகளைச் சேர்ந்த 800 பேரும் பங்குபற்றினர்.

நேற்று மாலை சிறிலங்கா இராணுவத் தளபதியின் உரையுடன் இந்தக் கருத்தரங்கு நிறைவடைந்தது.

இந்தக் கருத்தரங்கில் சமூக ஊடகங்கள் மற்றும் அதனைச் சார்ந்த அச்சுறுத்தல்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

இங்கு உரையாற்றிய சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சமூக ஊடகங்கள் பாதுகாப்புக்கு மறைமுகமான அச்சுறுத்தலாக மாறியிருப்பதாக கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!