ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்ய அனுமதி மறுப்பு

நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டில் ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பொது பலசேனாவின் பொதுச் செயலர் கலகொட அத்தே ஞானசார தேரர், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது.

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு ஹோமகம நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டுக் கொண்டிருந்த போது, நீதிமன்றத்துக்குள் குழப்பம் விளைவித்த குற்றச்சாட்டில், ஞானசார தேரருக்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனையை வழங்கியது.

இந்தத் தண்டனைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்வதற்கு, ஞானசார தேரரின் தரப்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் அனுமதி கோரப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் குழாம், ஞானசார தேரரின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நிராகரித்தனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!