அமெரிக்காவில் பொம்மை துப்பாக்கியை காட்டி மிரட்டிய ஆலிவுட் நடிகை சுட்டுக்கொலை

அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்சின் புறநகர் பகுதியில் பொம்மை துப்பாக்கியை காட்டி மிரட்டிய ஆலிவுட் நடிகையை போலீசார் சுட்டுக் கொன்றனர்

அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்சின் புறநகர் பகுதியான பசாடெனாவை சேர்ந்தவர் வனீசா மார்குயஷ் (49). ஹாலிவுட் நடிகையான இவர் பல டி.வி. தொடர்களிலும் நடித்து இருக்கிறார்.

இவர் வாடகைக்கு இருக்கும் வீட்டின் உரிமையாளர் போலீசுக்கு டெலிபோன் செய்து மார்குயஷ் தன்னை துப்பாக்கியை காட்டி மிரட்டுவதாக புகார் செய்தார். உடனே அங்கு வந்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் காணப்பட்டார். எனவே, அவரை மனநல ஆஸ்பத்திரியில் சேர்க்க முடிவு செய்தனர். அதற்காக அவருடன் சுமார் 1½ மணிநேரம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது அவர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் போலீசாரை சுட முயன்றார் அதைதொடர்ந்து அவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.

பின்னர் அவரிடம் இருந்த துப்பாக்கியை போலீசார் சோதனையிட்டனர். அது ஒரு பொம்மை துப்பாக்கி என தெரியவந்தது.

இவர் கடந்த ஆண்டு தன்னுடன் நடித்த நடிகர் ஜார்ஜ் குளுனி மீது ‘செக்ஸ்’ புகார் கூறி பரபரப்பு ஏற்படுத்தினார். ஆனால் இதை குளுனி கடுமையாக மறுத்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!