காணாமற்போனவர்கள் குறித்த மர்மம் துலங்குமா?

காணா­மல் போன­வர்­க­ளில் பலர் தடுப்பு முகாம்­க­ளில் சுய­ந।ி­னை­வில்­லாத நிலை­யில் காணப்­பட்­டனர் என்று பூசா தடுப்பு முகா­மி­லி­ருந்து அண்­மை­யில் விடு­த­லை­யான முன்­னாள் போராளி ஒரு­வர் தெரி­வித்­த­தால் பெரும் பர­ப­ரப்பு ஏற்­பட்­டுள்­ளது.

காணா­மல் போன­வர்­க­ளின் விவ­கா­ரம் தமி­ழர்­கள் மத்­தி­யில் பூதா­கா­ரம் எடுத்­துக் காணப்­ப­டு­கின்­றது. அவர்­க­ளின் உற­வு­கள் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலா­கத் தொடர் போராட்­டங்­க­ளில் ஈடு­பட்டு வரு­கின்­ற­னர். கண்­ணீ­ரும் கம்­ப­லை­யு­மாக இவர்­கள் காணப்­ப­டு­கின்­றமை தாங்க முடி­யாத வேத­னையை ஏற்­ப­டுத்தி வரு­கின்­றது.

பல்­வேறு சந்­தர்ப்­பங்­க­ளில் படை­யி­ன­ரால் கைது செய்­யப்­பட்­டோரே காணாமல்போயினர்

வீடு­க­ளில் வைத்­துக் கைது செய்­யப்­பட்­ட­வர்­க­ளும், போர் முனை­யில் வைத்­துக் கைது செய்­யப்­பட்­ட­வர்­க­ளும், படை­யி­ன­ரி­டம் சர­ண­டை­வ­தற்­கா­கச் சென்­ற­வர்­க­ளும், போர் இடம் பெற்­றுக் கொண்­டி­ருக்­கும்­போது அச்­சம் கார­ண­மா­கப் படை­யி­ன­ரின் பிர­தே­சத்­தி­னுள் உள்­நு­ழைந்­த­வர்­க­ளு­மெ­னப் பலர் காணா­மல் போயுள்­ள­தா­கத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. இவர்­க­ளின் உற­வு­கள் இவர்­களை எங்கு தேடி­யும் அவர்­க­ளைக் கண்­டு­பி­டிக்க முடி­ய­வில்லை. ஆனா­லும் உற­வி­னர்­கள் இன்­ன­மும் நம்­பிக்­கையை இழந்­து­வி­ட­வில்லை.

அண்­மை­யில் யாழ்ப்­பா­ணத்­துக்கு வருகை தந்த அரச தலை­வர், ‘‘எங்கு தேடி­யும் காணா­மல் போன­வர்­க­ளைக் கண்­டு­பி­டிக்க முடி­ய­வில்லை. இத­னால் அவர்­க­ளின் உற­வு­க­ளுக்கு நட்­ட­ஈடு வழங்­கு­வது தொடர்­பாக அரசு சிந்­தித்து வரு­கின்­றது’’ எனத் தெரி­வித்­தமை காணா­மல் போன­வர்­க­ளது உற­வு­க­ளுக்கு மிகக் கடு­மை­யான வேத­னையை ஏற்­ப­டுத்­தி­விட்­டது. ஆனா­லும் அதன் பின்­ன­ரும் அவர்­கள் நம்­பிக்­கையை இழந்­து­வி­ட­வில்லை.

காணா­மல் போனோ­ரில் பலர் உயி­ரு­டன் உள்­ள­தான செய்தி பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது

தற்­போது காணா­மல் போன­வர்­க­ளில் பலர் உயி­ரு­டன் இருப்­ப­தாக வௌிவந்த செய்தி, அந்த உற­வி­னர்­கள் மத்­தி­யில் ஒரு புறத்­தில் மகிழ்ச்­சி­யை­யும் மறு­பு­றத்­தில் வேதனை கலந்த எதிர்­பார்ப்­பை­யும் ஏற்­ப­டுத்்­தி­யுள்­ளது.

அரசு இந்த விட­யத்­தில் இனி­யும் மெத்­த­ன­மாக இருக்க முடி­யாது. காணா­மல் போன­வர்­கள் தமி­ழர்­கள்தானே­யென்ற அலட்­சிய மனோ­ப­வம் அர­சி­டம் இனி­யும் இருக்­கு­மே­யா­னால், அதன் எதிர் விளை­வு­கள் மோச­மா­ன­தாக அமைந்­து­வி­டும்.

அண்­மை­யில் இலங்­கைக்­குப் பய­ணம் மேற்­கொண்ட வௌிநாட்­டுப் பிர­தி­நி­தி­க­ளி­டம் காணா­மல் போன­வர்­கள் கண்­டி­பி­டிக்­கப்­ப­டு­வ­தன் அவ­சி­யத்தை எதிர்­கட்­சித் தலை­வ­ரான சம்­பந்­தன் வலி­யு­றுத்­திக் கூறி­யுள்­ளார். ஐ.நாவும் இந்த விட­யத்­தில் அதிக அக்­கறை செலுத்தி வரு­கின்­றது. இத­னால் அரசு இனி­யும் மெத்­த­ன­மாக இருந்­து­விட முடி­யாது.

பயங்­க­ர­வா­தத் தடுப்­புச் சட்­டத்­தின் கீழ் கைது செய்­யப்­பட்ட அர­சி­யல் கைதி­கள் எவ்­வித விசா­ர­ணை­களு­ மின்­றிப் பல ஆண்­டு­க­ளா­கச் சிறை­க­ளில் வாடி வரு­கின்­ற­னர். பலர் பத்து ஆண்­டு­க­ளுக்கு மேலா­கக்­கூட இவ்­வாறு சிறை­க­ளில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

இவர்­கள் தொடர் பாக உரிய விசா­ர­ணை­கள் மேற்­கொள்­ளப்­பட்டு அவர்­கள் குற்­ற­வா­ளி­க­ளென நிரூ­பிக்­கப்­பட்­டால், தண் டனை வழங்­கப்­பட வேண்­டும், நிர­ப­ரா­தி­கள் எனக் காணப்­பட்­டால் விடு­தலை செய்­யப்­ப­டல் வேண்­டும். இதில் ஒன்­றை­யும் செய்­யாது அரசு காலம் கடத்­து­வதை இனி­யும் அனு­ம­திக்க முடி­யாது.

பெரும்­பான்மை இனத்­த­வ­ரால் கிள்­ளுக் கீரை­யா­கக் கரு­தப்­ப­டும்சிறு­பான்மை இனத்­த­வர்­கள்

இந்த நாட்­டைப் பொறுத்­த­வ­ரை­யில், சிறு­பான்­மை­யின மக்­கள் கிள்­ளுக் கீரை­யா­கவே கரு­தப்­ப­டு­கின்­றார்­கள். அவர்­களை மனி­தர்­க­ளாக மதிக்­கின்ற மனோ­பா­வத்தை இங்கு காண­மு­டி­ய­வில்லை. பௌத்த மதத்­தைக் கடைப்­பி­டிப்­ப­தா­கக் கூறிக் கொள்­ப­வர்­கள், அதன் வழி நில்­லாது அதர்­மத்­தைக் கையில் எடுத்­துக்­கொள்­வது நல்­ல­தல்ல.

சிறு­பான்­மை­யி­னத் தலை­வ­ரான சம்­பந்­தனை எதிர்க்­கட்­சித் தலை­வர் பத­வி­யி­லி­ருந்து அகற்ற வேண்­டு­மென ஒரு பகு­தி­யி­னர் இன­வா­தக் கூச்­சல் போடு­கின்­ற­னர்.

நம்­பிக்­கை­யில்­லாப் பிரே­ர­ணைக்கு எதிர்ப்­புத் தெரி­விப்­ப­தற்கு கூட்­ட­மைப்பு ஏதா­வது நிபந்­த­னை­களை விதித்­தி­ருந்­தால் அவை ஏற்­றக்­கொள்­ளப்­ப­டக் கூடா­தென ஒரு சாரார் கூறி வரு­கின்­ற­னர். ஆனால் தமி­ழர்­க­ளின் பிரச்­சி­னை­கள் தொடர்­பாக இவர்­கள் சிறி­து­கூட அக்­கறை காட்­டு­வ­தில்லை.

மாறா­கத் தமி­ழர்­கள் படு­கின்ற வேத­னை­யில் இன்­பம் காணத் துடிக்­கின்­ற­னர். இது எந்த வகை­யில் நியா­ய­மெ­னத் தெரி­ய­வில்லை.

காணா­மல் போன­வர்­க­ளில் பலர் சுய­நி­னை­வின்றி தடுப்­புக் காவ­லில் உள்­ள­தாக முன்­னாள் போரா­ளி­யொ­ரு­வர் கூறி­யி­ருப்­பது சாதா­ர­ண­மா­ன­தொரு விட­ய­மல்ல. இந்த விட­யத்­தில் அதிக கரி­சனை காட்­டப்­ப­டல் வேண்­டும். ஆராய்ந்து பார்த்து உட­ன­டி­யாக நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்பட­ வேண்­டும்.

அரச தலை­வ­ரும், தலைமை அமைச்­ச­ரும், தாம் இந்த நாட்­டின் தலை­வர்­கள் என்ற ரீதி­யில் உட­ன­டி­யா­கச் செயற்­பட்டு நீதியை நிலை­நாட்ட வேண்­டும். காணா­மல் போன­வர்­க­ளும், அவர்­க­ளது உற­வு­க­ளும் விடு­கின்ற கண்­ணீ­ரைச் சாதா­ர­ண­மா­கக் கரு­தி­வி­டக்­கூ­டாது.

அவர்களது கண்ணீருக்கு அதிக வலு­வுள்­ளது என்­ப­தை­யும் மறந்­து­வி­டக் கூடாது. இந்த விட­யத்­தில் எடுக்­கப்­ப­டு­கின்ற ஆக்­க­பூர்­வ­மான நட­வ­டிக்­கை­கள் இந்த நாட்­டின் மீதான தவ­றான அவப்­பெ­ய­ரைத் துடைத்­தெ­றி­யும். உரி­ய­வர்­கள் இதை உணர்ந்­தால் அதுவே போது­மா­னது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!