மாங்குட் சூறவளியால் 64 பேர் உயிரிழப்பு

பிலிப்பைன்ஸை தாக்கிய மாங்குட் சூறாவளியின் காரணமாக இதுவரை 64 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் பலர் உயிரிழந்திருக்கலாம் என அந் நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

‘மங்குட்’ புயலானது பிலிப்பைன்ஸ் நாட்டின் ககாயன் மாகாணத்திலுள்ள லூஷான் என்ற தீவை கடுமையாக தாக்கியதுடன், பக்காயோ என்ற இடத்தில் கரையை கடந்தது.

இந்த புயலின் காரணமாக மணிக்கு 305 கிலோமீற்றர் வேகத்திலான பலத்த காற்று, வெள்ளப் பெருக்கு என்பவற்றில் சிக்குண்டு மீட்பு படையினர் உட்பட 64 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் காணாமல் போயுள்ளதாக மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

பிலிப்பைன்ஸ் தொடர்ந்து ஹொங்கோங் கடற்பரப்பை கடந்த மங்குட் சூறாவளியினால் 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். அத்துடன் 48 முகாம்களில் 1200 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக ஹெங்கோங் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் மங்குட் சூறாவளி மணித்தியாலயத்துக்கு 160 கிலோமீற்றர் வேகத்தில் சீனாவின் குவாங்டாங் மாநிலத்தை கடந்தைமையினால் 2.4 மில்லியன் மக்கள் அங்கிருந்து பாதுகாப்பான இடத்துக்கு வெளியேற்றப்பட்டதுடன், 50 ஆயிரம் மீன்பிடி படகுகளை துறைமுகத்திற்கு திரும்பி வர சீன அரசாங்கம் அறிவித்தது.

அத்துடன் இப் பகுதிகளில் மீட்பு படையினர் தொடர்ந்தும் சேவையில் ஈடுபட்டு வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!