தொலைபேசிகளை நீண்ட நேரம் பயண்படுத்தும் பெற்றோர்களுக்கு எதிராக குழந்தைகள் போராட்டம்

ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் பெற்றோர்கள் தொலைபேசிகளே கதி என இருந்ததால் 7 வயதே நிரம்பிய குழந்தைகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஜெர்மனி நாட்டில் அமைந்துள்ள ஹம்பர்க் என்ற நகரில் ஏழு வயது நிரம்பிய குழந்தைகள் தங்களது பெற்றோர்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

“போராட்டத்தில் நாங்கள் இருக்கிறோம். உங்களுக்கு எதிராக கோஷங்கள் எழுப்புகிறோம். ஏனென்றால் நீங்கள் எப்போதும் கையட்க்க தொலைபேசிகளை மட்டும் தான் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்” என எழுதப்பட்ட பதாகைகளை ஏந்திக்கொண்டு அவர்கள் கோஷங்களை எழுப்பியுள்ளனர்.

இந்த போரட்டத்தை ஏழு வயது எமில் என்ற சிறுவனின் தலைமையில் தான் நடைபெற்றது என்பது ஆச்சரியப்பட வைக்கிறது. “இந்த போரட்டத்துக்கு பிறகாவது பெற்றோர்கள் தொலைபேசிகளை பார்ப்பதை விட்டுவிட்டு குழந்தைகளை பார்ப்பார்கள்” என்று நம்புகிறோம் என எமில் கூறியுள்ளார்.

ஹம்பர்க்கில் எமில் தலைமையில் நடந்துள்ள இந்த போராட்டம் அவர்களின் பெற்றோர்களுக்கு மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உள்ள பெற்றோர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள ஒரு எச்சரிக்கை செய்தி எனப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!