ஜெயலலிதா விவகாரம் : புதிய தகவலை வெளியிட்டார் பன்னீர்செல்வம்

அப்பல்லோ வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்தபோது ஜெயலலிதாவை நான் ஒரு முறை கூட பார்க்கவேயில்லை என்று துணை முதல்வர் ஓ .பன்னீர் செல்வம் மீண்டும் தெளிவுப்படுத்தியிருக்கிறார்.

அப்பல்லோ வைத்தியசாலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது அவரை யாரெல்லாம் சந்தித்தனர் என்பதில் இன்று வரை சர்ச்சை நீடிக்கிறது.

முன்னாள் தலைமை செயலாளர் ராம்மோகனராவ் விசாரணை ஆணையத்தில் சொல்லும் போது,‘ அப்பல்லோ வைத்தியசாலையில் ஜெயலலிதா உடல் நிலை தேறி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய போது ஒ.பன்னீர்செல்வம் உடனிருந்தார் என்று தெரிவித்திருக்கிறார். ஆனால் ஒ.பன்னீர்செல்வம் நான் ஒருமுறை கூட ஜெயலலிதாவை பார்க்கவேயில்லை என்று திரும்ப திரும்ப கூறிவருகிறார்.

இந்நிலையில் அவர் நேற்றுமுன்தினம் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது..,

‘அப்பல்லோ வைத்தியசாலையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட நாள் முதல் அவர் உயிரோடு இருந்தவரை நான் பார்க்கவேயில்லை.’ என்றிருக்கிறார்.

இதனிடையே நீதவான் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் வாக்குமூலம் அளித்தவர்களிடம் சசிகலா தரப்பு சட்டத்தரணி ராஜா செந்தூர்பாண்டியன் குறுக்கு விசாரணை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!