ஐ.நா. பிரதிநிதி கோத்தபாய திடீர்ச் சந்திப்பு

Gotabaya5போர்க் குற்றங்கள் தொடர்பில் இலங்கை உள்ளக விசாரணை நடத்தவில்லையென்றால், ஐக்கிய நாடுகள் சபையினூடாகச் சர்வதேச விசாரனை மேற்கொள்ள நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்று பிரிட்டன் எச்சரித்துள்ள நிலையில், ஐ.நா பிரதிச் செயலாளர் எலியாசனுடன் தீடீர்ச் சந்திப்பொன்றைப் பாதுகாப்புச் செயலரும், ஜனாதிபதியின் சகோதரருமான கோத்தபாய ராஜபக்ச மேற்கொண்டுள்ளார்.

அமெரிக்காவுக்கு இரகசியப் பயணம் மேற்கொண்டுள்ள பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச, நியூயோர்கிலுள்ள ஐ.நா பொதுச் சபைக் கட்டடத்தில் பிரதிச் செயலாளருடன் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை அதிகாலை சந்திப்பை நடத்தியுள்ளார்.

இந்தத் தீடீர் சந்திப்புத் தொடர்பில் தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படாத நிலையில், இன்ன சிற்றி பிரஸ் பிரதிச் செயலரிடம் மின்னஞ்சல் மூலமாக கலந்துரையாடப்பட்ட விடயங்களைக் கேட்டிருந்தது.

அதற்குப் பதிலளித்துள்ள பிரதிச் செயலர், இந்தச் சந்திப்பு விசேடமான சந்திப்பு ஒன்றும் இல்லை. உறுப்பு நாடுகளுக்கிடையேயான வழக்கமான சந்திப்புக்களின் ஒரு பகுதியாகவே இது அமைந்திருந்ததாகக் கூறியுள்ளார்.

இதேவேளை எதிர்வரும் மார்ச் மாதம் ஐ.நா மனித உரிமைகள் கூட்டத் தொடரில் இலங்கை அரசு பெரும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: , , ,

Leave a Reply