சிங்கள மன்னர்கள் இந்திய தமிழ் பெண்களை திருமணம் செய்து கொண்டதாக பொதுமக்கள் தொடர்பு அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். சிங்கள மன்னர்கள் தமிழ் பெண்களை திருமணம் செய்து கொண்ட காரணத்திற்காக இலங்கை இந்து நாடாக மாறிவிடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை ஓர் சிங்கள பௌத்த நாடு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ் மனைவியர் வழிபாடுகளை செய்வதற்காக சிங்கள மன்னர்கள் இலங்கையில் இந்து ஆலயங்களை நிறுவியதாகத் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இலங்கை வரலாற்றை தவறாக புரிந்து கொண்டுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இராவணனின் சகோதரனின் பெயர் விபிஷன என அவர் தெரிவித்துள்ளார். இராவண மன்னன் ஓர் சிங்களவர் என அமைச்சர்

















