சினிமா சம்மந்தப்பட்ட விழாக்களை ஒளிபரப்பும் உரிமையைப் பெறுவதில் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு இடையே கடும்போட்டி..!
இதுபோன்ற விழாக்கள் தங்கள் தொலைக்காட்சிக்குக் கிடைக்க கடுமையாக லாபி பண்ணுகிறார்கள். குறிப்பாக..விஜய் டி.வி. இப்படிப்பட்ட லாபியில் தீவிர கவனம் செலுத்தி வருவதாகக் கேள்வி.
விஜய் டி..வி.யினால் வளர்த்துவிடப்பட்டு தற்போது முன்னணி ஹீரோவாக இருக்கும் சிவகார்த்திகேயன் உட்பட சில பிரபலங்களை தங்களின் சேனலுக்கு லாபி செய்ய பயன்படுத்தி வருகிறது என்றும் சொல்கிறார்கள்.
சிவகார்த்திகேயன் நடித்த ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தின் 100ஆவது நாள் விழா கடந்த 21.12.2013 அன்று சென்னையில் ஹயாத் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.
இந்த விழாவை டி.வி.யில் ஒளிபரப்பக் கேட்டு சில சேனல்கள் தயாரிப்பாளரை அணுகி இருக்கின்றன. ஆனால் படத்தின் நாயகனான சிவகார்த்திகேயன் சிபாரிசு செய்ததோ விஜய் டி.வி.க்கு.
‘நான் நடிச்ச படத்தோட 100வது நாள் விழா என்னை வளர்த்துவிட்ட விஜய் டி.வி.யிலதான் வரணும்’ – என்றெல்லாம் சென்ட்டிமெண்ட்டாகப் பேசி இருக்கிறார் சிவகார்த்திகேயன்.
மற்ற சேனல்கள் கேட்ட தொகையைவிட மிகக்குறைந்த தொகையையே தருவதாக சொல்லி இருந்தது விஜய் டி.வி.
இந்நிலையில் சிவகார்த்திகேயன் பேச்சுக்கு மதிப்பளித்து விஜய் டி.வி.க்கு ரைட்ஸ் கொடுத்தால் தனக்கு குறிப்பிட்ட தொகை நஷ்டம் வரும் என்பதால், கலைஞர் டி.விக்குக் கொடுத்துவிட்டாராம் தயாரிப்பாளர்.
தன் சிபாரிசு செல்லுபடியாகாததினால் சிவகார்த்திகேயன் அப்ஸெட்…!
















