புத்தாண்டில் மக்களின் நம்பிக்கையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கோரியுள்ளார். இலங்கை வாழ் மக்களுக்கு சுதந்திரமும், சமாதானமும் பெற்றுக ;கொடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். மக்களுக்கு அபிவிருத்தியை வழங்கும் முனைப்பில் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். புத்தாண்டை முன்னிட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அபிவிருத்தி நோக்கிய தசாப்தத்திற்கு நகர்ந்து செல்வதாகத் தெரிவித்துள்ளார். பெருந்தெருக்கள், வீதிகள், துறைமுகங்கள், விமான நிலையங்கள், மின்சார நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
நாட்டில் பாரியளவில் அபிவிருத்தி ஏற்படுத்தப்பட உள்ளதாகவும் மக்கள் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை கொண்டிருக்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். தேசிய ஐக்கியத்தை உறுதிப்படுத்தி நாட்டை அபிவிருத்திப் பாதைக்கு இட்டுச் செல்வதே தமதும் அரசாங்கத்தினதும் நோக்கமாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
















