கடந்த மூன்று தசாப்பங்களுக்கு மேலாக ஜேர்மனியில் வாழ்ந்தவரும், தற்போது கடந்த சில வருடங்களாக இங்கிலாந்தின் இலண்டன் மாநகரில் வாழ்ந்து வருபவருமான திரு ஸ்ரீபதி சிவனடியானின் இதயத்தில் உருப்பெற்று தற்போது உலகெங்கும் நன்கு அறியப்பட்ட தொண்டு நிறுவனமாகத் திகழும் “இரங்கும் இல்லம்” தனது 35வது ஆண்டு நிறைவை கடந்த 28ம் திகதி சனிக்கிழமை இலண்டன் மாநகரில் கொண்டாடியது.
மேற்படி விழாவின் பிரதம விருந்தினராக கனடா உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் திரு ஆர். என். லோகேந்திரலிங்கம் அழைக்கப்பட்டிருந்தார்.
அன்றைய தினம் பல கலை நிகழ்ச்சிகளும் மேலும் பல அறிஞர்களின் உரைகளும் இடம்பெற்றன.
பிரதம விருந்தினர் திரு ஆர்.என். லோகேந்திரலிங்கம் தனது உரையின் போது,
இவ்வாறான நிதி சேகரிப்பு விடயம் என்பது எவ்வளவு கஸ்டமானது என்பதை தான் அனுபவபூர்வமாக உணர்ந்துள்ளதாகவும், இவ்வாறிருக்கும் போது நண்பர் ஸ்ரீபதி சிவனடியான் அவர்கள் கடந்த 35 வருடங்களாக தனது சொந்த உழைப்பின் ஒரு பகுதியையும் பிறரிடமிருந்து நன்கொடையாக பெற்றுக்கொள்ளும் நிதியையும் கொண்டு பிறருக்கு உதவிசெய்யும் நற்பணியை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றார் என்றும் இதனால் அவர் இன்று மட்டுமல்ல என்றுமே எமது பாராட்டுக்களுக்கு உரியவர் ஆகின்றார் என்றார்.
இராப்போசன விருந்து மற்றும் அதிஸ்டலாபச் சீட்டு போன்றவை இடம்பெற்ற மேற்படி நிகழ்ச்சியில் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.
















