இலங்கை உலகப் போதைப் பொருள் மையமாக துரித கதியில் மாற்றமடைந்து வருகின்றது என ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
போதைப் பொருள் கடத்தல் மற்றும் சூதாட்டத்திற்கு ஊக்கமளிக்கும் அரசாங்கம் எவ்வாறு இளைஞர் கிளர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க கேள்வி எழுப்பியுள்ளார்.
இளைஞர் விரக்தி என்ற சொல்லை அகராதியிலிருந்தே இல்லாதொழிக்கப் போவதாக ஜனாதிபதி அண்மையில் அறிவித்திருந்தார்.
இதற்காக அரசாங்கம் எவ்வாறான நடவடிக்கைகளை எடுத்துள்ளது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மது பயன்பாடு மற்றும் சூதாட்டம் ஆகியன அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
உலகில் அதிகளவில் மது அருந்தும் நாடுகளில் இலங்கை முன்னணி வகிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டில் மது பயன்பாடு 20 மில்லியன் லீற்றர் மதுபானம் அதிகளவில் நுகரப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
2012ம் ஆண்டில் 65 மில்லியன் லீற்றர் மதுபானம் அருந்தப்பட்டுள்ளதாகவும், கடந்த ஆண்டில் 85 மில்லியன் லீற்றர் மதுபானம் அருந்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதுவா அரசாங்கத்தின் போதைக்கு முற்றுப்புள்ளி திட்டமா என கேள்வி எழுப்பியுள்ளார்.
வெகு விரைவில் உலகில் போதைப் பொருள் விநியோகம் செய்யப்படும் மிக முக்கியமான மையமாக இலங்கை மாற்றமடையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆகிய முக்கிய போதைப் பொருள் மையமாக இலங்கை மாற்றமடைந்துள்ளதாகவும், விரைவில் அது உலகின் முக்கிய வர்த்தக நிலையமாக மாற்றமடையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
















