ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இலங்கையை தண்டிக்கும் சர்தேசத்தின் நோக்கம் நிறைவேறுமா??

un-flagஎதிர்வரும் மார்ச் 2014 இல் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உர்pமைகள் சபையில் இலங்கைக்கு எதிராக மீண்டும் கொண்டுவரப்படவுள்ள மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களிலிருந்து தம்மைக் காப்பாற்றிக்கொள்ள இலங்கை அரசும் அதன் ஜனாதிபதியும் ஏன் அவர்களைக் காப்பாற்றும் இராணுவமும் கூட்டாக முயன்றுவருவதை எமக்கு கிடைக்கும் செய்திகளின் ஊடாக நாம் காண்கின்றோம்.

அந்த நாட்டுக்கு செல்லும் வெளிநாட்டவர்களில் அரசியல்வாதிகள் மற்றும் பத்திரிகையாளர்களை குறிவைக்கும் இலங்கை அரசின் புலனாய்வுப் பிரிவினர் மேற்படி வெளிநாட்டவர்கள் ஐக்கிய நாடுகள் சபையின் அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக பிரயோகிக்கக் கூடிய தடயங்களைத் தேடுகின்றனரா? என்பதையே உன்னிப்பாக கவனிப்பதாகக் கூறப்படுகின்றது.குறிப்பாக அண்மையில் வன்னிப் பகுதிக்கு சென்ற தமிழகத்தின் பத்திரிகையாளர் ஒருவரை கைது செய்து சித்திரவதை செய்து பின்னர் நாடு கடத்தியமை எமக்கு பல செய்திகளை உணர்த்தியுள்ளது.

தமிழ் பிரபாகரன் என்னும் பெயரைக் கொண்ட மேற்படி தமிழக இளம் பத்திரிகையாளரைக் கூட “நீ இலங்கைக்கு வந்து விபரங்களைச் சேகரித்து பின்னர் ஜெனிவாவிற்கு கொண்டு செல்லப்போகின்றாயா? என்று இலங்கை இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவினர் தன்னிடம் அச்சுறுத்தும் வகையில் கேட்டதாகக் கூறப்படுகின்றது. இவற்றையெல்லாம் பார்க்கும் போது இலங்கை அரசானது எதிர்வரும் மார்ச் மாதத்தில் ஜெனிவாவில் நடைபெறும் மனித உரிமைகள் சபையி;ன் தொடர் அமர்வுகளை ம்pகவும் கவனமாக எதிர்பார்த்துள்ளது என்பது நிரூபணமாகின்றது.

இது இவ்வாறிக்க ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் சபைக்கு முன்பாக கூடி இலங்கை அரசிற்கு எதிரான கோசங்களை எழுப்பி சபையின் பிரதிநிதிகளுக்கு விளக்கம் கொடுக்கத் தயாராகி வரும் புலம்பெயர் தமிழ் மக்களைப் போன்று, சிங்கள மக்களும் அங்கு கூடவுள்ளதாகவும் அவர்களோடு சில தமிழ் பேசும் நபர்களும் இணையவுள்ளதாகவும் செய்திகள் கசிந்துள்ளன.

இவ்வாறு இலங்கையை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளிலிருந்து காப்பாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படும் நேரத்தில் இலங்கையில் நெஞ்சில் ‘இடி விழுந்தது” போன்ற ஒரு அச்சத்தைத் தரவுள்ள வகையில் ஒரு முக்கியஸ்த்தர் குழு மீண்டும் இலங்கைக்கு செல்லவுள்ளதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

மேற்படி செய்தியின் படி ஐக்கிய நாடுக்ள சபையின். மனித உரிமைகள் சபையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் ஆலோசனைக்குழு ஒன்று இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளும் சாத்தியம் இருப்பதாகவும் எதிர்வரும் பெப்ரவரி முதல் வாரமளவில் இந்தக் குழு கொழும்புக்குச் செல்லும் எனத் தெரிய வருகிறது.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கை பயணத்துக்குப் பின்னர் அங்கு ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பில் ஆராய்ந்து மார்ச் தொடரில் அறிக்கை சமர்ப்பிக்கும் நோக்கிலேயே இந்தக் குழுவின் பயணம் அமையவுள்ளதாகவும் சர்வதேச மனித உரிமை அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் விடுத்த கோரிக்கையின் பிரகாரமே தமது உயர்மட்ட ஆலோசனைக் குழுவை ஐ.நா.ஆணையர் நவநீதம்பிள்ளை கொழும்புக்கு அனுப்புகிறார் எனக் கூறப்பட்டாலும் இதை அவர் இன்னும் உறுதிப்படுத்தவில்லை என்றும் செய்திகள் வெள்pயாகியுள்ளன. அதேவேளை, இலங்கையின் நிலைவரங்கள் தொடர்பில்
நேரடியாக பேச்சு நடத்துவதற்கு தமக்கு நேரம் வழங்குமாறுகோரி சில மனித உரிமைகள் அமைப்புகள் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளன.

இதன்படி, ஜெனிவாவில் நடைபெறும் உபமாநாடுகளின் போது பெரும்பாலும் இந்தச் சந்திப்புகள் இடம்பெறலாம் என ஜெனிவாத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐ.நா. ஆணையாளருடன் சந்திப்புக்கு நேரம் கோரப்பட்டுள்ளது என்பதை ஒரு கொழும்புப் பத்திரிகையாளர் அறிவித்துள்ளார்.. அண்மையில் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்த ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை, இலங்கையின் மனித உரிமை நிலைவரம் தொடர்பிலும், தமது பயணத்தின் பின்னரான இலங்கையின் செயற்பாடுகள் குறித்தும் அறிக்கை வெளியிடவுள்ளார் என்பதும் எதிர்வரும் மார்ச் மாத அமர்வுகளில் இலங்கை எந்த வகையான சவால்களை எதிர்கொள்ளப் போகின்றது என்பதையும் நாம் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

Thanks: www.canadauthayan.ca

Tags: , ,

Leave a Reply