யாழில் கடும் மழை : கரையோரப் பாடசாலைகளுக்கு விடுமுறை

wether-jaffnaசீரற்ற காலநிலை காரணமாக வடமராட்சி மற்றும் தீவகக் கரையோரப் பாடசாலைகளுக்கும் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள கரையோரப் பாடசாலைகளுக்கும் இன்று திங்கட்கிழமை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் தெரிவித்தார்.

தாழமுக்கம் காரணமாக வடமாகாணத்தின் கரையோரப் பகுதிகளில் இன்று திங்கட்கிழமை பகல் காற்றுடன் கூடிய கடும் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எதிர்வுகூறியுள்ளது. இந்த நிலையிலேயே மேற்படி பாடசாலைகளுக்கு இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

மேலும், யாழ்.மாவட்டத்தில் இன்று அதிகாலை 2 மணி தொடக்கம் கடுமையான மழை பெய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Tags: ,

Leave a Reply