திருமணத்துக்கு மறுத்த மகள்களுக்கு அசிட் வீசிய தந்தை

pak-asitபாகிஸ்தானில் மகள்கள் மீது ஆசிட் வீசிய தந்தையை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பாகிஸ்தானின் லாகூர் அருகே உள்ள பட்டோகி கிராமத்தை சேர்ந்தவர் முகமது அஸ்லாம். கட்டட தொழிலாளி.

இவரது மனைவியின் முதல் கணவரின் மகள்கள் மாலிகா 19 ஜவேரியா 23.

அண்டை வீட்டில் குடியிருந்த நபரிடம் கணிசமான பணத்தை பெற்று கொண்ட அஸ்லாம், மாலிகா அல்லது ஜவேரியாவை, அவருக்கு திருமணம் செய்து கொடுக்க ஒப்புக்கொண்டார்.

ஆனால் இதற்கு இந்த பெண்கள் மறுத்து விட்டனர். இதனால் கோபமடைந்த அஸ்லாம், இந்த பெண்கள் தூங்கி கொண்டிருந்த போது அவர்கள் மீது ஆசிட்டை வீசினார்.

இதில் பலத்த காயமடைந்த மாலிகா, ஜவேரியா இருவரும், வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இவர்களது நிலை கவலைக்கிடமாக உள்ளது. ஆசிட் வீசிய அஸ்லாமை, பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Tags: , ,

Leave a Reply