பெற்ற மகளை 7 மாதங்களாக பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய தந்தை கைது

Sexual-Assaultமீரட் அருகே பெற்ற மகளை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய காமூகத் தந்தையை பொலிசார் கைது செய்துள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் அருகே 40 வயதுடைய ஒருவர் தனது 16 வயது மகளை 7 மாதங்களாக தொடந்து பலமுறை பலாத்காரம் செய்துள்ளார். அத்துடன் இதை வெளியில் சொன்னால் கொன்றுவிடுவதாகவும் மிரட்டி வந்துள்ளார்.

இதில் பயந்துபோன அந்த சிறுமி இந்த சம்பவத்தை வெளியில் யாரிடமும் சொல்லாமல் மறைத்துள்ளார்.

நாளடைவில் சிறுமி கர்ப்பமடையவே நடந்த சம்பவத்தை தனது உறவினர் ஒருவரிடம் தெரிவித்திருக்கிறார். அதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர், பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.

புகாரை பெற்று கொண்ட காவல் துறையினர், சிறுமியின் தந்தையை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்ட சிறுமியை சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

Tags: ,

Leave a Reply