வடக்கு மாகாண அலுவலகங்கள் அனைத்திலும் வைக்கப்பட வேண்டும் முதல்வரின் உருவப்படம் இன்றைய அமர்வில் இதற்கும் வருகிறது பிரேரணை

vikneswaran5வடக்கு மாகாண முதலமைச்சரின் உருவப்படத்தை மாகாணசபை அலுவலகங்கள் அனைத்திலும் வைக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர் பிரேரணை முன்வைத்துள்ளார்.

வடக்கு மாகாணசபையின் அமர்வு இன்று வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு இடம் பெறவுள்ளது. இந்த அமர்வில் 7 பிரேணைகள் சமர்ப்பிக்கப் படவுள்ளன.

செங்கோல் தயார்
வடக்கு மாகாணசபையின் அமர்வு இதுவரை காலமும் செங்கோல் இன்றியே நடை பெற்று வந்தது. இந்த நிலையில் வடக்கு மாகாண சபைக்குப் புதியதோர் செங்கோல் மற்றும் மாகாணக் கொடி, மாகாண இலச்சினை என்பன தயாரிக்கப்பட்டுள்ளன.

இவை இன்றையதினம் உறுப்பினர்களின் அங்கீகாரத்துக்காகச் சபையில் சமர்ப்பிக்கப் படவுள்ளன.

பிரேரணைகள்
கொக்குத் தொடுவாய் மக்களின் வாழ்வாதாரத்துக்குரிய விவசாயக் காணிகள் மீளப் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும். முல்லைத்தீவில் விவசாய வீதிகள் புனரமைப்புச் செய்யப் படவேண்டும்.

சுகாதாரத் திணைக்களத்தின் தற்காலிக வாகனச் சாரதிகள் நிரந்தர நியமனம் செய்யப்பட வேண்டும். ஒட்டிசுட்டானைத் தனிப் பிரதேச சபையாக மாற்றவேண்டும்.

பனை, தென்னை உற்பத்தி மற்றும் சந்தை வாய்ப்பை மேம்படுத்துவதற்காக அதிகார சபை அமைக்கப்ப வேண்டும். ஆறுமுகநாவலர் மற்றும் தனி நாயகம் அடிகளார் ஆகியோருக்கு மாநாகரசபை எல்லைக்குள் சிலை அமைக்கப்பட வேண்டும்.

புனர்வாழ்வு பெற்றுவரும் தமிழ் அரசியல் கைதிகளை ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்ய வேண்டும். அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்குத் தீர்வுகாணப்பட வேண்டும்.

போரில் அவயவங்களை இழந்தவர்களை, மாகாண அரச சேவையில் இணைத்துக் கொள்ள வேண்டும். முறிகண்டி கோயிலில் வாகனங்கள் தரித்துச் செல்வதைக் கட்டாயமாக்கல் வேண்டும்.

வடக்கு மாகாணசபையின் உள்ளகக் கணக்காய்வு திணைக்களங்கள் மன்னார், முல்லைத்தீவில் அமைக்கப்பட வேண்டும். வடக்கு மாகாண முதலமைச்சரின் உருவப்படம் மாகாண அலுவலகங்களில் காட்சிப் படுத்தப்பட வேண்டும்.

மேற்குறித்த பிரேரணைகளே இன்று சமர்ப்பிக்கப்படவுள்ளன.

எதிர்கட்சித் தலைவர் இல்லை
வடக்கு மாகாணசபையின் இதுவரை எந்தவொரு அமர் வுகளிலும் பங்குபற்றாது விடு முறையிலிருந்த இராம நாதன் அங்கஜன் இன்றைய அமர்வில் பங்கெடுக்கவுள்ள துடன் அவர் கன்னியுரை நிகழ்த்தவுள்ளார்.

அத்துடன் வடக்கு மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவராக நிய மிக்கப்பட்ட கந்தசாமி கம லேந்திரன் கொலைக் குற்றச் சாட்டில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள மையால், சபை அமர்வுகளில் பங்கெடுக்கவில்லை.

இந்நிலையில் வேறெவரை யும் எதிர்க்கட்சித் தலைவராக நியமித்துக் கட்சி செயலாளரி னால் கடிதம் எதுவும் பேர வைச் செயலகத்துக்கு அனுப்பி வைக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.

Tags: ,

Leave a Reply