சர்ச்சைக்குறிய படத்தை மாற்றப் போவதில்லை – அமெரிக்கா

Rapp1வடக்கில், இரணைப்பாலை சென்.அந்தனிஸ் பாடசாலை மைதானத்தில் எடுத்த சர்ச்சைக்குறிய படத்தையும் அதன் விளக்கத்தையும் டுவிடரில் இருந்து மாற்றப் போவதில்லை என இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.

2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம், வடக்கின் இரணைப்பாலை சென்.அந்தனிஸ் பாடசாலை மைதானத்தின் மீது இலங்கை இராணுவத்தினர் நடத்திய ஷெல் தாக்குதல்களால் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டதாக அமெரிக்காவின் சமூக வலைத்தளத்தளமான டுவீட்டரில் புகைப்படத்துடன் செய்தி வெளியாகியிருந்தது.

இந்த புகைப்பட்டத்தில் இலங்கைக்கு சென்றிருந்த அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பூகோள குற்றவியல் நீதிக்கான பணியகத்தில் போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் தூதுவர் ஸ்டீபன் ஜே.ரெப்பும், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மிச்சேல் ஜே. சிசனும் இருந்தனர்.

இந்த புகைப்படத்துடனான செய்தி தொடர்பில் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்திடம் விளக்கம் கோரப்படும் என இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கலாநிதி கருணாதிலக்க அமுனுகம தெரிவித்தார். எனினும் அமெரிக்கா இலங்கையின் கண்டனங்களை கருத்தில் எடுக்காமல் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக தனது தூதரகத்தின் ஊடாக அறிவித்துள்ளது.

Tags: ,

Leave a Reply