பொங்கல் விருந்தாக, கடந்த 10 ஆம் தேதி அன்று வெளியான அஜித்தின் வீரம், விஜய்யின் ஜில்லா படங்களின் தலை எழுத்தை ரசிகர்கள் மிகத்தெளிவாக எழுதி விட்டனர்.
அதன்படி வீரம் பட சூப்பர்டூப்பர் ஹிட் என்ற வெற்றி நிலையை பெற்றுவிட்டது.
ஜில்லா படம் சொதப்பல் என்பதால் தலைவா படத்தைப் போலவே வெகு சீக்கிரம் தியேட்டரைவிட்டுப்போய்விடும் என்பதே மக்கள் தீர்ப்பின் அடிப்படையில் தற்போதைய நிலவரம்.
உண்மை இப்படி இருக்க…
ஜில்லா படத்தின் இணை தயாரிப்பாளர்களில் ஒருவரான நடிகர் ஜீவா, தன் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவந்திருக்கும் ஜில்லா படத்தை தூக்கிப் பிடிப்பதற்காக, அதற்கு போட்டியாக களத்தில் இருக்கும் வீரம் படத்தைப் பற்றி நெகட்டிவ்வான செய்திகளை பரப்பி வருகிறாராம்.
தனக்கு நெருக்கமான நட்பு வட்டத்தில் பேசும்போது, ஜில்லா படத்தைப்பற்றி ஆஹா ஓஹோ என புகழ்ந்து பேசும் ஜீவா, வீரம் படம் வேஸ்ட் பாஸ் என்றும் கூசாமல் சொல்கிறாராம்.
தோல்வியைத் தழுவ தயாராகிவிட்ட தன் ஜில்லா படத்தைக் காப்பாற்ற அந்தப் படத்தைப் பற்றி ஜீவா உயர்வாகப் பேசுவதை மார்க்கெட்டிங் தந்திரம் என்று மன்னித்துவிட்டுவிடலாம்.
அதையும் தாண்டி, வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் வீரம் படத்தை வேஸ்ட் என்று சொல்வதை நியாயப்படுத்தவே முடியாது.
நாகாக்கணும் ஜீவா..!
தல ரசிகர்கள் கொதித்து எழுந்தால் தாங்க முடியாது..!
















