போர்க் குற்றங்கள் தொடர்பான அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் விசேட நிபுணர் ஸ்ரீபன் ராப், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து இலங்கை தொடர்பில் சர்வதேசத்துக்கு இரட்டை வேடம் போடுவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இலங்கைச் சட்டத்தரணிகள் ஒன்றியம் இந்தக் குற்றச் சாட்டை முன்வைத்துள்ளது. இந்த நிலையில் நாட்டின் சகல தொழிற்சங்கங்களும் இணைந்து இவ்வாறான காட்டிச் கொடுப்புக்கு எதிராகச் செயற்பட வேண்டும் என்றும் ஒன்றியத்தின் இணைப்பாளர் ரவீந்து மனோஜ் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீபன் ராப் போன்றோர் இங்கு வந்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் இணைந்து, அன்று விடுதலைப் புலிகளால் குண்டுகளால் பெற்றுக்கொள்ள முடியாததை இன்று பேனையினால் பெற்றுக்கொள்ள முனைகின்றனர். இதற்கு ஒரு போதும் இடம்கொடுக்க கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.
















