அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலர் நிஷா தேசாய் பிஸ்வால் ஜெனீவா அமர்வுகளுக்கு முன்பாக இலங்கைக்கு வருகை தருவார் என்று இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
முன்னதாகக் கடந்த 11ஆம் திகதி நிஷா தேசாய் பிஸ்வால் இலங்கைக்கு முதன்முறையாக வருகை தருவார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பின்னர் அந்தப் பயணம் நிறுத்தப்பட்டது.
இந்திய – அமெரிக்க ராஜதந்திர முறுகல் நிலை காரணமாக ஆசியாவுக்கான அவரது பயணம் தற்காலிகமாக பிற்போடப்பட்டுள்ளதாக அமெரிக்க ராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலராக இருந்த ரொபேர்ட் ஓ பிளேக்கின் இடத்துக்கு நிஷா தேசாய் பிஸ்வால் நியமிக்கப்பட்டிருந்தார்.
இவர் இலங்கை தொடர்பில் கடுமையான நிலைப் பாடுகளையே எடுத்து வந்தார். இந்த நிலையில் அமெரிக்காவின் போர்க்குற்ற நிபுணர் ஸ்ரீபன் ஜே.ராப்பின் பயணத்தை தொடர்ந்து நிஷா இலங்கைக்கு வருவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இலங்கைக்கு வருவதற்கு முன்னர், அமெரிக்க உதவிச் செயலர் நிஷா தேசாய் பிஸ்வால், இந்தியா செல்லவும் திட்டமிட்டிருந்தார். ஆனால் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள இராஜதந்திர முறுகலை அடுத்து, அவரது இந்தியப் பயணம் தாமதமடைந்துள்ளது.
இதனால் நிஷா தேசாய் பிஸ்வாலின் இலங்கைப் பயணமும் தாமதமடைவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஜெனீவா அமர்வுகளுக்கு முன்னதாகவே அவர் இலங்கைக்கு வருகை தருவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தொடர்பில் கடுமையான நிலைப்பாடுகளையே எடுத்து வந்தார். இந்த நிலையில் அமெரிக்காவின் போர்க்குற்ற நிபுணர் ஸ்ரீபன் ஜே.ராப்பின் பயணத்தை தொடர்ந்து நிஷா இலங்கைக்கு வருவார்.
















