தேசிய ஒன்றுமையை கட்டியெழுப்ப தேரர்களுக்கும் பங்களிப்புச் செய்ய முடியும் என்று ஜனநாயக கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
கட்சியினால் ஸ்தாபிக்கப்பட்ட ஜனநாயக பிக்கு அமைப்பு என்ற பெயரில் புதிய அமைப்பின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தாம் எண்ணும் வகையில் நிரந்தர சமாதான நாடாக திகழ, கடந்த கால நிகழ்வுகளை மனதில் கொண்டு, எதிர்காலத்தில் பிரச்சினை தோன்றாமல் இருப்பதற்கு தேரர்களுக்கு தலைமைத்துவம் ஏற்க முடியும் என்று கருதுகின்றோன்.
தேதர்களின் முன்மாதிரியன செயற்பாடுகள் நாட்டின் இன ஒற்றுமை, சமய ஒன்றுமை என்பவற்றை பேணி, நாட்டை முன்நோக்கி கொண்டுச் செல்ல முடியும் என்று தான் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
















