இறுதிப்போரின் போது 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட தகவல் தவறானது என்பதை ஆள் மற்றும் சொத்து இழப்புக்கள் குறித்த கணக்கெடுப்புகள் உறுதிப்படுத்தும் என மனித உரிமை தொடர்பான ஜனாதிபதியின் விசேட ஆலோசகரும் அமைச்சருமான மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
யுத்தத்திற்குப் பின்னர் தற்போது வடக்கு கிழக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆள் மற்றும் சொத்து இழப்புக்கள் குறித்த கணக்கெடுப்புகள் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
அதனடிப்படையில் 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர் என்ற ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட பிழையான தகவல் வெளிச்சத்துக்கு வரும் என்றார்.
இதேவேளை இலங்கையின் சனத்தொகை கணக்கெடுப்பு திணைக்களம் தற்போது வடக்குகிழக்கில் கணக்கெடுப்பை மேற்கொண்டு வருகிறது.
இறுதிப்போர் இடம்பெற்ற வேளையில் யாரும் அங்கு சென்று எத்தனை பேர் கொல்லப்பட்டார்கள் என்பதை கணக்கிடவில்லை.
எனவே ஐக்கிய நாடுகளின் அறிக்கை பிழையானது. எனினும் எவ்வாறான சவாலையும் எதிர்கொள்ள நாம் தயாராக உள்ளோம் என மஹிந்த சமரசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.
















