அறிமுகப்படமான கூடல்நகர் தவிர தொடர்ந்து இயக்கிய தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை படங்களில் கவனத்தைக் கவர்ந்த இயக்குநர் சீனுராமசாமி.
இவரது அடுத்த படம் – ‘இடம்பொருள் ஏவல்’.
லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் சீனுராமசாமியின் முந்தைய படங்களின் நாயகர்களான விஜய் சேதுபதி – விஷ்ணு இருவரும் இணைந்து நடிக்கின்றனர்.
இப்படத்தில் இடம் பெறும் அனைத்துப் பாடல்களையும் வைரமுத்து எழுதுகிறார். இசை யுவன்சங்கர் ராஜா.யெஸ்… ‘இடம்பொருள் ஏவல்’ படத்தில் இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜாவும், வைரமுத்துவும் முதன் முறையாக இணைந்து பணியாற்ற உள்ளனர்.
இயக்குநர் சீனு ராமசாமி மீது அன்பும், நம்பிக்கையும் கொண்டவர் வைரமுத்து. லிங்குசாமி மீது மரியாதை கொண்டவர் யுவன்சங்கர்ராஜா.
இருவரது விருப்பத்திற்கிணங்க வைரமுத்துவும், யுவனும் இணைந்து பணிபுரிய சம்மதித்தார்களாம்.
அப்படியே இளையராஜாவையும் வைரமுத்துவையும் கைகுலுக்க வச்சிடுங்க சீனுராமசாமி…
















