முல்லையில் மீனவர்களின் உபகரணங்கள் திருட்டு

mullaitheevuமுல்லைத்தீவு, கொக்கிளாய் புளியமுனை பகுதிகளைச் சேர்ந்த 25 மீனவர்களின் தொழில் உபகரணங்கள் இரவோடிரவாக காணாமல்போயுள்ளன.

இத் திருட்டு தொடர்பாக ஜானகபுர பகுதியைச் சேர்ந்த சிங்கள மீனவர்கள் மீதும் புல்மோட்டை பகுதியைச் சேர்ந்த முஸ்லிம் மீனவர்கள் மீதும் தாம் சந்தேகம் கொண்டுள்ளதாக முல்லை மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில்இ நேற்று காலை வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனை தொலைபேசியில் தொடர்பு கொண்ட மக்கள் இச்சம்பவம் தொடர்பில் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மாகாண சபை கருத்து தெரிவித்த உறுப்பினர் ரவிகரன்இ 3 படகுகள்இ 8 குல்லாக்கள்இ 25 வலைகள் என பல லட்சம் பெறுமதியான தமிழ் மீனவர்களின் தொழில் உபகரணங்கள் இரவோடிரவாக திருட்டு போயுள்ளன என்றார்.

அண்மையில் தடை செய்யப்பட்ட தொழில்களை செய்த சிங்கள மீனவர்களை முல்லைத்தீவு கடற்றொழில் உதவிப் பணிப்பாளருடன் இணைந்துஇ கைது செய்யும் நடவடிக்கையில் தமிழ் மீனவர்கள் பங்களித்தார்கள் என்கிற காழ்ப்புணர்ச்சியே காரணமாகவிருக்கலாம் என்றார்.

அது மட்டுமன்றி 3 தினங்களுக்கு முன்னர் இக் கடற்பரப்பில் வைத்து தமிழ் மீனவர்களின் வலைகளை புல்மோட்டை முஸ்லிம் மீனவர்கள் பறித்துச் சென்றிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

இத்திருட்டுச் சம்பவத்தால் அப்பகுதியில் தமிழ் மீனவர் குடும்பங்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளதோடுஇ தமது வாழ்வாதாரத்தையும் இழந்துள்ளனர் என மாகாணசபை உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.

Tags: ,

Leave a Reply