வடபகுதியில் இன ஒழிப்பை ஆரம்பிக்கிறது அமெரிக்கா; சாடுகிறார் விமல் வீரவன்ஸ

wimal-weerawansaஇலங்கையின் வடபகுதியில் இன ஒழிப்பை அமெரிக்கா ஆரம்பித்து வைக்கின்றது என்று அமைச்சரும், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ஸ குற்றஞ்சாட்டியுள்ளார்.

நேற்றுமுன்தினம் நடைபெற்ற தேசிய சுதந்திர முன்னணியின் மாவட்ட மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது:

எதிர்வரும் மார்ச் மாதம் மனித உரிமைகள் சபை அமர்வில் இலங்கைக்கு எதிரான பிரேரணை கொண்டு வரப்பட விருப்பதைத் தவிர்ப்பதற்காக அரசு மீது கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் நிபந்தனைகளை விதித்துள்ளது.

இந்த நிபந்தனைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டால் அது அப்பகுதியில் வாழும் அனைத்து சிங்கள மக்களையும் வெளி யேற்றுவதற்கான சூழலை உருவாக்கிவிடும்.

இனஒழிப்பு வடக்கில் இடம்பெற்றது. 1983 ஆம் ஆண்டில் கறுப்பு ஜுலை தென்னிலங்கையில் ஏற்பட்டது. எனினும் இன்னமும் இங்கு தமிழர்கள் வசிக்கிறார்கள். கறுப்பு ஜுலை காலகட்டத்தில் இருந்தவர்களை விட இன்று இங்கு பெருமளவில் தமிழர்கள் இருக்கிறார்கள்.

அரசும், இராணுவமும் போர்க் குற்றங்களை இழைத்துள்ளன என குற்றஞ்சாட்டுவதன் மூல மாக அமெரிக்கா இலங்கையில் இனச் சண்டையை மூட்டிவிட முனைகிறது – என்றார்.

Tags: ,

Leave a Reply