பெண்களை கோயிலுக்குள் அனுமதிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்த 1,407 பேர் கைது

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் பெண்களை அனுமதிப்பதை எதிர்த்து கேரளா முழுவதும் போரட்டம் நடத்திய 1,407 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களும் சென்று சாமி தரிசனம் மேற்கொள்ள கடந்த மாதம் 28 ஆம் திகதி இந்திய உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

ஆனால் இந்த தீர்ப்பு அளிக்கப்பட்டதிலிருந்து எதிர்ப்புத் தெரிவித்து கேரளாவில் நாள்தோறும் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் என்பன நடந்து வருகின்றன.

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை, மாதாந்த பூஜைக்காக கடந்த வாரம் திறக்கப்பட்டது. ஆனால் பெண்களை அனுதிக்க ரேள அரசு தீவிரம் காட்டி போதுமான பொலிஸ் பாதுகாப்பை உறுதி செய்திருந்தாலும் போராட்டக் காரர்கள் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்காமல் தொடர்ந்தும் போராட்டம் நடத்தினர்.

அவர்களின் கடும் எதிர்ப்பால், 10 க்கும் மேற்பட்ட பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

இந் நிலையில் இப் போராட்டம் வன்முறையாக மாறியமையில் பொலிஸார் போராட்டத்தில் ஈடுபட்ட எதிராக 440 வழக்குகளை பதிவு செய்திருந்ததுடன் மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி, வன்முறையில் ஈடுபட்ட 1,407 பேர் கடந்த 2 நாட்களில் கைது செய்யப்பட்டனர்.

அத்துடன் சந்தேகத்திற்குரிய 200 க்கும் மேற்பட்டோரின் புகைப்படங்களை மாநிலம் முழுவதும் அனுப்பப்பட்டு தேடுதல் நடததப்படுவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!