டாடா நிர்வாக இயக்குனர் தற்கொலைக்கு மனைவியே காரணம்

karlதாய்லாந்து தலைநகர் பாங்காங்க்கில் டாடா மோட்டார்ஸ் நிறுவன நிர்வாக இயக்குனர் கார்ல் ஸ்லிம் (51). கடந்த ஞாயிறன்று மர்மமான முறையில் மரணமடைந்தார்.

அவரது உடல் அவர் தங்கியிருந்த ஷங்க்ரி ஓட்டலில் உள்ள 4 வது மாடியில் கிடந்தது. அவர் 22வது மாடியில் உள்ள திறந்த ஜன்னல் வழியாக விழுந்து இறந்திருக்க வாய்ப்பிருப்பதாக அந்நாட்டு பொலிஸார் கூறியுள்ளனர்.

இது குறித்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில்,ஸ்லிமின் மனைவி சாலி எழுதிய மூன்று பக்க கடிதமொன்று புதிய ஆதாரமாக கிடைத்தது. சாலி அக்கடிதத்தில் தனது வீட்டு பிரச்சனைகளை பற்றி எழுதியுள்ளதாக, காவல்துறை அதிகாரி சோம்யாத் பூயாகேவ் தெரிவித்தார்.

இக்கடிதம் தொடர்பாகவே இருவருக்கும் மோதல் வெடித்துள்ளது. அதன் தொடர்ச்சியாகவே அவர் தற்கொலை முடிவை எடுத்தாக தெரியவந்துள்ளது. அவர் 22வது மாடியிலிருந்து குதித்த போது சுவற்றில் மோதிய அவரது தலை கடுமையாக சேதமடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஆட்டோமொபைல் தொழில் இறங்கு முகத்தில் இருந்தபோது டாடா நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்த அவர் அக்கம்பெனியின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியதாக கூறப்படுகிறது. 2012 ஆம் ஆண்டு அந்நிறுவனத்தில் சேர்ந்த அவர் குறுகிய காலத்தில் அதை முன்னுக்கு கொண்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: ,

Leave a Reply