ஈழத் தமிழர் படுகொலைக்கு நீதி கோரி ஜெனிவா நோக்கிய ஆயிரம் கிலோமீற்றர் நடை பயணத்தை, ஐரோப்பிய வாழ் தமிழ் மக்கள் நேற்று முன்தினம் புதன்கிழமை நெதர்லாந்திலுள்ள சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தின் முன்பாக ஆரம்பித்துள்ளனர்.
2009 ஆம் ஆண்டு இறுதிப் போரில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டமை, பல தசாப்தங்ளாகச் சிங்கள அரசினால் முன்னெடுக்கப்பட்ட திட்டமிட்ட இன அழிப்பு ஆகியவற்றுக்கு நீதி கோரி இந்த நடைபயணம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபையின் அமர்வு எதிர்வரும் மார்ச் மாதம் 3 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை ஜெனிவாவில் இடம்பெறவுள்ளது. இந்த அமர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கும்வேளை மார்ச் 10 ஆம் திகதி நடை பயணம் ஜெனிவாவைச் சென்றடையவுள்ளது.
ஈழத்தமிழருக்காகத் தீக்குளித்த முத்துக்குமாருக்கு ஈகச்சுடரேற்றப்பட்டு இரு நிமிட அக வணக்கத்தின் பின்னர் நேற்று முன்தினம் புதன்கிழமை இந்த நடைபயணம் ஆரம்பமானது.
நெதர்லாந்திலுள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு முன்பாக ஒன்று கூடிய தமிழ் மக்கள் இந்த அஞ்சலி நிகழ்வுகளைத் தொடர்ந்து நீதிக்கான நடைபயணத்தை தொடங்கினர்.
















