ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையை பயன்படுத்தி இலங்கையை கட்டுப்படுத்த முயற்சிக்கப்படுவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.மத்துகம பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.பிரித்தானிய காலணித்துவ ஆட்சியின் பின்னர் இலங்கை சுதந்திர நாடாக மாற்றமடைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும் புறச்சக்திகள் தொடர்ந்தும் இலங்கையை கட்டுப்படுத்த முயற்சித்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.மனித உரிமை என்ற போர்வையில் இலங்கையின் உள்விவகாரங்களில் தலையீடு செய்ய முயற்சி;க்கப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் இறுதிக் கட்ட யுத்தம் நடைபெற்ற கடைசி மூன்று நாட்கள் பற்றி கேள்வி எழுப்பப்பட்டு வருவதாகவும், இரண்டாம் உலகப் போரின் இறுதி இரண்டு நாட்கள் பற்றி கேள்வி எழுப்பினால் யார் குற்றவாளிகள் ஆவார்கள் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
யுத்த நிறைவின் பின்னர் நாட்டில் குண்டுகள் வெடிப்பதில்லை என்ற போதிலும் ஒவ்வொரு ஆறு மாதத்திற்கு ஒரு தடவையும் ஜெனீவாவில் குண்டுகள் வெடிப்பதாகத் தெரிவித்துள்ளார்.யுத்த நிறைவின் இலங்கையில் ஏற்பட்டுள்ள அபிவிருத்தியைப் போன்று உலகின் வேறு எந்த நாட்டிலும் அபிவிருத்தி ஏற்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.எந்த காரணத்திற்காகவும் தாய் நாட்டை காட்டிக் கொடுக்கக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.
















