தற்போது ஆட்சியில் உள்ளவர் குடும்பத்திற்குள் அதிகாரத்தை தக்கவைக்க முயற்சி-
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென்றே தொடர்ந்தும் வலியுறுத்தினேன் – சந்திரிக்கா
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டமென்றே தொடர்ந்தும் வலியுறுத்தினேன் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
சமாதான பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதில் தாம் திட சங்கற்பம் பூண்டிருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
பங்களுர் வாழும் கலை பயிற்சி நிலையத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த மகளிர் மாநாடு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
யுத்த வலயத்தில் அபிவிருத்தித் திட்டங்களையும், சமாதான பேச்சுவார்த்தைகளையும் ஒரே நேரத்தில் தாம் முன்னெடுத்து வந்ததாகத் தெரிவித்துள்ளார்.
எல்லா சந்தர்ப்பங்களிலும் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவே விரும்பினேன் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
புலிகள் அரசாங்க அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் பங்கேற்பதனை விரும்பவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச மத்தியஸ்தஸ்துடன் பேச்சுவார்த்தை நடாத்தப்பட வேண்டுமென தாம் கோரியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தாம் ஆரம்பித்து வைத்த வைத்தியசாலைகளில் தமிழீழ விடுதலைப் புலிப் போராளிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தமது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருந்த போதிலும் தாம் சமாதான முனைப்புக்களை மேற்கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.
தேர்தலுக்கு இரண்டு தினங்கள் முன்னதாகவும், அதன் பின்னரும் புலிகள் என் உயிரை காவு கொள்ள முயற்சித்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இருண்ட சில தருணங்களை வாழ்க்கையில் கடந்துள்ளதாகவும், கல்வியும் மத நம்பிக்கையும் வாழ்க்கையை செழுமைபடுத்தியது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தனிப்பட்ட ஒர் தலைவர் தம்மை பற்றி மட்டுமே சந்தித்தால் அங்கு ஊழல் மோசடிகள் இடம்பெறும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
‘அதிகாரம் கடவுளின் பரிசு என ஆட்சியாளர் கருதி தான் நினைத்ததனை செய்கின்றார். தம்மையம் தமது குடும்பத்தையும் சுற்றி ஆட்சி அதிகாரத்தை வியாபிப்பது மிகவும் ஆபத்தானது’ என சந்திரிக்கா தெரிவித்துள்ளார்.
தற்போது ஆட்சியில் உள்ளவர் குடும்பத்திற்குள் அதிகாரத்தை தக்கவைக்க முயற்சி-
தனது ஆட்சி காலத்தில் இராணுவ முனைப்புக்களை விட சமாதான வழிமுறைகளின் மூலமே தமிழீழ விடுதலைப் புலிகளை அனுக முயற்சித்ததாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
பெங்களுரில் வாழும் கலை சார்பில் இடம்பெற்ற 6வது பெண்கள் மாநாட்டில் உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
போர் காலத்தின் போது சமாதானமும் அதேநேரம் அபிவிருத்தி போர் பாதிக்கப்பட்ட இடங்களில் மேற்கொள்ளப்படுவதை தாம் உறுதி செய்துக்கொண்டதாக சந்திரிகா குறிப்பிட்டுள்ளார்.
எப்போது விடுதலைப் புலிகளுடன் சமாதான பேச்சுவார்த்தைக்கு தாம் தயாராகவே இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
தமது உயிரை பறிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட போதும், தாம் காயமடைந்த போராளிகளுக்கு சிகிச்சை மேற்கொள்ள வைத்தியசாலைகளை திறந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது ஆட்சியில் உள்ளவர் அதிகாரத்தை தமது குடும்பத்துக்குள் வைத்துக்கொள்ள முயற்சிக்கிறார் என்றும் சந்திரிகா தெரிவித்துள்ளார்.
















