இலங்கையை விமர்சனம் செய்வது எனது நோக்கமல்ல – கெதரீன் ரஸல்

Catherine-Russellஇலங்கையை விமர்சனம் செய்வது தமது நோக்கமல்ல என மகளிர் விவகாரம் தொடர்பான அமெரிக்காவின் விசேட பிரதிநிதி கெதரீன் ரஸல் தெரிவித்துள்ளார். தமது இலங்கையை விஜயத்தை பலர் பிழையாக விளங்கிக் கொண்டுள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். இலங்கையை விமர்சனம் செய்யும் நோக்கில் தாம் விஜயம் செய்ய எத்தனிக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கைக்கு உதவிகளை வழங்க வேண்டும் என்பதே தமது பிரதான நோக்கமாகும் என அவர் தெரிவித்துள்ளார். 2009ம் ஆண்டு யுத்தம் நிறைவுக்குக் கொண்டு வரப்பட்டது முதல் அமெரிக்கா பல்வேறு வழிகளில் இலங்கைக்கு உதவிகளை வழங்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மகளிர் அபிவிருத்திக்காக கடந்த ஐந்து ஆண்டுகளில் அமெரிக்கா 40 மில்லியன் டொலர்களை வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும், இலங்கையின் பெண்கள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுவோருக்கு எதிராக சட்டம் உரிய முறையில் அமுல்படுத்தப்படாமை வருத்தமளிப்பதாகத் தெரிவித்துள்ளார். பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்;துள்ளதாகத் தெரிவித்துள்ளார். சாட்சிகளைப் பாதுகாக்கும் சட்டத்தை வலுப்படுத்துவதன் மூலம் பல்வேறு குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Tags: , ,

Leave a Reply