மட்டக்களப்பு சந்திவெளி பிரதேசத்தில் இரு கோஸ்ரிகளுக்குள் இடம்பெற்ற கைகலப்பின் போது பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் மூவரும் ஒரு இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் இவர்கள் ஏறாவூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றில் நீதிபதி ஏ.எம்.எம்.றியாழ் முன்னிலையில் வியாழக்கிழமை ஆஜர் செய்யப்பட்டபோது இவர்களை தலா ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் விடுதலை செய்யுமாறு நீதி மன்றத்தினால் உத்தரவிடப்பட்டது.
கடந்த செவ்வாய்கிழமையன்று ஆலயம் ஒன்று அமைக்கப்பட்ட போது இரு கோஸ்ரிகளுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தக்கம் பின்னர் கைகலப்பில் முடிந்தது.
















