பெண்களிடையே மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த அந்நோய் பாதித்த ஒரு அவுஸ்திரேலிய பெண், தனக்கு சிகிச்சைக்கு பின்னர் ஏற்பட்ட அனுபவத்தை நிர்வாண புகைப்படங்களாக ஃபேஸ்புக்கில் வெளியிட்டார்.
அவுஸ்திரேலியாவை சேர்ந்த 32 வயது பெண் Beth Whaanga என்பவருக்கு மார்பக புற்றுநோய் பாதிக்கப்பட்டிருந்தது. இரண்டு மார்பகங்களிலும் புற்றுநோய் இருந்ததால், அவற்றை சர்ஜரி மூலம் அகற்ற வேண்டும் என மருத்துவர்கள் ஆலோசனை கூறினார்.
அதற்கு ஒப்புக்கொண்ட Beth Whaanga, தனக்கு சர்ஜர் நடக்கும்போது அதை புகைப்பட எடுக்க வேண்டும் என்றும், அதற்கு மருத்துவமனை அனுமதி கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அதற்கு மருத்துவமனை நிர்வாகம் ஒப்புக்கொண்டது.
சர்ஜரிக்கு முன் தான் இருந்த நிலை, சர்ஜரிக்கு பின் தற்போது இருக்கும் நிலை ஆகியவற்றை தனது ஆஸ்தான புகைப்படக்காரரின் உதவியுடன் புகைப்படம் எடுத்து அவற்றை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்தார்.
இது செக்ஸ் காரணங்களுக்காக வெளியிடப்பட்ட ஆபாச புகைப்படங்கள் இல்லை என்றும், இந்த புகைப்படங்களை பார்த்து மார்பக புற்றுநோய் குறித்து ஆஸ்திரேலிய பெண்கள் விழிப்புணர்வு ஏற்படுத்துவதே தனது நோக்கம் என்றும் Beth Whaanga கூறியுள்ளார். அவருடைய இந்த முயற்சிக்கு ஃபேஸ்புக்கில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
















