மட்டக்களப்பு வாகரை கிருமிச்சை பிரதேசத்தில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சந்தேக நபர்கள் 4 பேர்களை சனிக்கிழமையன்று மாலை தாம் கைது செய்துள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்கள் சேருவில பிரதேசத்தைச் சேர்ந்த பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்களாகும்.
இவர்களிடமிருந்து புதையல் எடுப்பதற்காக பயன்படுத்தப்படும் கூரிய ஆயுதங்கள் மற்றும் கல் உடைக்கும் அளவாங்கு போன்றவைகளை கைப்பற்றியுள்ளதாகவும் தெரிவித்தனர்.
இதேவேளை சந்தேக நபர்களை திங்கள்கிழமையன்று வாழைச்சேனை மாவட்ட நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
















