இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் மத்திய அரசு நல்ல முடிவு எடுக்கும்

srilanka-indiaமத்திய மந்திரி நாராயணசாமி டெல்லிக்கு புறப்பட்டு சென்ற போது விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது

சில்லறை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீட்டை அனுமதிப்பது தொடர்பான சட்டத்தை இயற்றுவதற்குமுன், அதற்கான குழுவின் ஆலோசனையை கேட்டுதான் கொண்டுவரப்பட்டது.

இந்த சட்டத்தை அந்தந்த மாநிலங்கள் விருப்பப்பட்டால் மட்டுமே அமல்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக தி.மு.க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது அந்த கட்சியின் முடிவு. நாங்கள் தவறு என கூறமாட்டோம்.

இலங்கைக்கு எதிராக ஐ.நா.சபையில் அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தின் மீது மத்திய அரசு ஆலோசித்து ஒரு நல்ல முடிவு எடுக்கும்.

கடந்த 2 முறை இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை இந்தியா உறுதியாக ஆதரித்தது.

அதேபோல் இப்போதும் மத்திய அரசு நல்ல முடிவை எடுக்கும்.

மத்திய அரசு எப்போதுமே இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு ஆதரவாகத்தான் செயல்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags: , ,

Leave a Reply