மக்களுக்கு சேவையாற்றுவதே அரச ஊழியர்களின் தலையாய கடமையாகும்: ஜனாதிபதி தெரிவிப்பு

Mahinda-Rajapaksa1நாட்டு மக்களுக்கு சேவையாற்றுவதே அரச ஊழியர்களின் தலையாய கடமையாகும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சுற்று நிருபங்கள், தொழில் நிறுவனக்கோவை, நிதிச் சட்ட மூலங்கள் போன்ற அனைத்துமே மக்களின் சேவைவை விடவும் பெரிதல்ல. இவை அனைத்துமே மக்களுக்கு சேவையாற்றும் நோக்கில் உருவாக்கப்பட்டதாகும்.

மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் மக்கள் பிரதிநிதிகளுடன் முரண்பாடுகளை ஏற்படுத்திக்கொள்ளக் கூடாது.

நல்லிணக்கத்துடனும், பொறுப்புணர்ச்சியுடனும் மக்களுக்கு சேவையாற்ற வேண்டியது அரச ஊழியர்களின் கடமையாகும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அரச நிர்வாக சேவையின் 50 ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிகழ்வு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

Tags: , ,

Leave a Reply