பாஷையூரில் வீடொன்றிலிருந்து சுமார் 40 கிலோகிராம் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளது. இந்த வெடிபொருட்களை வைத்திருந்த பாஷையூர் வாசிகள் இருவர் கடல் மார்க்கமாக நாச்சிக்குடாவிற்குத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வன்னியில் இடம்பெற்ற போருக்குப் பின்னர் ஒரே தடவையில் மீட்கப்பட்ட அதிகளவான அபாயகரமான வெடிபொருள் இதுவென பொலிசார் தெரிவித்தனர்.
அத்துடன், அவர்களைப் பிடிப்பதற்கான நடவடிக்கையினை முன்னெடுத்து வருவதாகவும், கடலில் மீன்களை வெடி வைத்துப் பிடிப்பதற்காக இந்த வெடிபொருட்களை வைத்திருந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ் பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.
















