பவர்ஸ்டாருக்கு சம்பள பாக்கி வைக்கவில்லை : விஜய் மில்டன்

Powerstar-Srinivasanகோலிசோடா படத்தில் நடித்ததற்காக பவர்ஸ்டார் சீனிவாசனுக்கு சம்பள பாக்கி வைக்கவில்லை என்று இயக்குனர் விஜய் மில்டன் தெரிவித்துள்ளார்.

கோலிசோடா படத்தில் நடிக்க 6நாட்கள் கால்ஷீட் கேட்டனர் என்றும்,ஆனால் தான் சம்பந்தப்பட்ட காட்சிகளை 3 நாட்களில் முடித்துவிட்டனர் என்றும் பவர்ஸ்டார் சீனிவாசன் தெரிவித்திருந்தார்.

மேலும் தனக்கு வர வேண்டிய சம்பள பாக்கியை கேட்டால் கேவலமாக பேசுகிறார்கள் என்று அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இது குறித்து கோலிசோடா படத்தின் தயாரிப்பாளரும், இயக்குனருமான விஜய் மில்டன் கூறுகையில்,

கோலிசோடா படத்திற்காக பவர்ஸ்டாரை அணுகினோம். அவர் 6 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருந்தார். ஆனால் 3 நாட்கள் தான் படப்பிடிப்புக்கு வந்தார்.

பவர்ஸ்டார் தான் நடித்த காட்சிகளுக்கு டப்பிங் பேச வர மறுத்துவிட்டார். இதனால் வேறு ஒருவரை வைத்து நாங்கள் டப்பிங் பேச வைத்தோம்.

அவர் நடித்த 3நாட்களுக்கான சம்பளத்தை அவருக்கு கொடுத்துவிட்டோம். சம்பள பாக்கி எதுவும் இல்லை. அப்படி இருக்கையில் அவர் வராத 3 நாட்களுக்கு சம்பளம் கேட்டால் எப்படி கொடுப்பது.

பவர்ஸ்டார் எங்கள் மீது கூறும் புகாரை நடிகர் சங்கம் வழியாக தெரிவித்திருக்க வேண்டும்.

ஆனால் அவர் அப்படி செய்யவில்லை. அவர் நடிகர் சங்கம் வழியாக அணுகினாலும் பதில் அளிக்க தயாராக உள்ளோம் என்றார் விஜய் மில்டன்.

Tags: , ,

Leave a Reply