இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையில்ழ முக்கிய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
இரு தரப்பு உறவுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஜப்பானுக்கான இலங்கை தூதுவர் வசந்த கரன்னாகொட, அந்நாட்டு வெளிவிவகாரப் பிரதி அமைச்சர் சிஜீ கிஹாராவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இரண்டு நாடுகளினதும் முக்கியஸ்தர்கள் மேற்கொண்ட விஜயங்கள் தொடர்பிலும் இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்ளக் கூடிய வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என இந்த சந்திப்பின் போது இணக்கம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வர்த்தக ரீதியான உறவுகளை வலுப்படுத்திக் கொள்வது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது
















