‘ட்ரெயின் டிக்கெட்’ கூட எடுக்கத் தெரியாதவன் ஹீரோவாம்..! : இளம் ஹீரோக்கள் மீது பாய்ந்த தயாரிப்பாளர்

snehavin_kadhalargal_movie_audio_launch_stills_63332bb-370x260எதையுமே தைரியமாகப் பேசுவதில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார் கெட்டிக்காரர். அதிலும் நியாயமான விஷயத்தை உண்மையாகப் பேசுவார். அப்படித்தான் தற்போது தமிழ்சினிமாவில் இளம் ஹீரோக்களின் கதை கேட்கும் லட்சணத்தை வெளிச்சம் போட்டுக் காட்டினார். மேலும் இப்போதுள்ள ஹீரோக்களுக்கு சம்பளம் மட்டுமே பெரிதாக தெரிவதாகவும் கடுமையாகச் சாடினார்.

‘சிநேகாவின் காதலர்கள்’ படத்தின் ஆடியோ பங்ஷனில் அவர் பேசியதாவது :

“இப்போ இருக்கிற ஹீரோக்களுக்கு உலக நடப்புன்னா என்னன்னே தெரியிறதில்ல. சமீபத்துல ஒரு பெரிய ஹீரோவிடம் டைரக்டர் ஒருவர் ஒரு கதையை சொல்லியிருக்கிறார். கதையை கேட்டு மிரண்டு போன அந்த ஹீரோ, ‘கதை சூப்பரா இருக்கு. தயாரிப்பாளரை கொண்டு வாங்க… நாம சேர்ந்து பண்ணலாம்னு,’ன்னு சொல்லியிருக்கிறார். அந்த டைரக்டர் என்கிட்ட வந்து அந்த கதை ஏற்கெனவே வெளிவந்து படுதோல்வியடைந்த ஒரு படத்தோட கதை. இதுகூட அந்த ஹீரோவுக்கு தெரியலையே?ன்னு புலம்பினார்.

ஹீரோக்களுக்கு எந்த மாதிரி கதைகள் வருகின்றன. எந்த மாதிரி படங்கள் வருகின்றன என்ற அடிப்படை அறிவு கூட இல்லை என்பதைத்தான் இது காட்டுகிறது. இவங்களுக்கு வெளி உலகமே தெரியறதில்ல. ப்ளைட் டிக்கெட் எப்படி எடுக்க வேண்டும். ட்ரெயின் டிக்கெட் எப்படி எடுக்க வேண்டும் என்று கூடத் தெரியாது. ஆனால் சம்பளத்தை மட்டும் எப்படி விதவிதமாக உயர்த்தலாம், எப்படி வாங்கலாம் என்பதை தெரிந்து வைத்திருக்கிறார்கள்.

ஒரு படம் ஓடவில்லை என்றாலும் அந்த படத்தின் ஹீரோ அடுத்த படத்துக்கு சம்பளத்தை ஏத்திடறார். ஆனால் டைரக்டருக்கு அடுத்த படம் கிடைக்காது. இதுதான் இன்றைய நிலை” என்றார் கேயார்.

Tags: , , ,

Leave a Reply