அமெரிக்கா தேவையின்றி இலங்கை விவகாரங்களில் தலையீடு செய்கின்றது – வாசுதேவ நாணயக்கார

Vasudevaஅமெரிக்கா தேவையின்றி இலங்கை விவகாரங்களில் தலையீடு செய்து வருவதாக தேசிய மொழிகள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இலங்கையின் உள்விவகரங்களில் தலையிடு செய்து பிராந்திய வலயத்தில் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதே அமெரிக்காவின் பிரதான இலக்கு என அவா சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன ஆட்சி செய்த காலத்தில் திருகோணமலை துறைமுகத்தை கைப்பற்ற அமெரிக்கா முயற்சி எடுத்தது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த திட்டத்திற்கு இடதுசாரி கட்சிகள் எதிர்ப்பை வெளியிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் வொய்ஸ் ஒப் அமெரிக்கா என்ற வானொலிச் சேவை ஆரம்பிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

கல்வி நிகழ்ச்சிகளை மட்டும் ஒளிபரப்பு செய்வதாக உறுதியளித்து ஆரம்பிக்கப்பட்ட இந்த வானொலிச் சேவையில் அரசியல் நிகழ்ச்சிகள் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படடதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ராஜீவ் காந்தி கொலையாளிகளுக்கு தண்டனை விதிக்கப்பதனை விடுத்து தமிழக முதல்வர் ஜெயலலிதாவும், முன்னாள் முதல்வர் கருணாநிதியும் இலங்கையை யுத்தக் குற்றச் செயல்களின் ஊடாக தண்டிக்க முயற்சித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

ஒட்டுமொத்த தென் ஆசிய பிராந்திய வலயத்தில் தங்களது ஆதிக்கத்தை நிலைநாட்டுவதே அமெரிக்காவின் நோக்கமாக அமைந்;துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Tags: , ,

Leave a Reply