இலங்கையின் வெளியுறவுக் கொள்கைகளை பாதுகாப்பு அமைச்சே தீர்மானிக்கின்றது – தயான் ஜயதிலக்க

dayanஇலங்கையின் வெளியுறவுக் கொள்கைகளை பாதுகாப்பு அமைச்சே தீர்மானித்து வருவதாக முன்னாள் சிரேஸ்ட ராஜதந்திரி தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு அமைச்சின் கட்டுப்பாட்டில் நாட்டின் வெளிவிவகாரக் கொள்கை அமுலாக்கம் காணப்பட்டால் சர்வதேச சமூகத்தை வெற்றிகொள்ள முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அமரர் லக்ஸ்மன் கதிர்காமல் மிகச் சிறந்த முறையில் வெளியுறவுக் கொள்கைகளை அமுல்படுத்தியிருந்தார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

லக்ஸ்மன் கதிர்காமர் பதவி வகித்திருந்தால் இவ்வாறான நெருக்கடி நிலைமைகள் ஏற்பட்டிருக்காது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பு நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற புத்திஜீவிகள் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட உள்ள தீர்மானம் நியாயமற்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், தீர்மானம் நிறைவேற்றுவதற்கான பின்னணியை அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அதனால் ஏற்படக் கூடிய பாதக விளைவுகளினால் ஒட்டுமொத்த நாடே இழப்புக்களை எதிர்நோக்கும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தற்போதைய வெளிவிவகார அமைச்சின் இயலாமையே பல்வேறு நெருக்கடிகளுக்கான ஏதுவெனத் தெரிவித்துள்ளார்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவிவகார துறை தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகராக பிரட்மன் வீரக்கோன் என்ற அனுபவம் மிக்க அரசாங்க அதிகாரி கடயைமாற்றியதாகவும், தற்போது அதே பதவியை சர்வதேச விவகாரம் பற்றிய எவ்வித அனுபவமும் இ;ல்லாத சஜின் வாஸ் குணவர்தன வகித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் இலங்கைக்கு பாதக விளைவுகள் ஏற்படக் கூடும் என தயான் ஜயதிலக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags: , , ,

Leave a Reply